ப்ளாகருக்கான கூகுள் சர்ச் கன்சோல் வழிகாட்டி -2 (Google Search Console for blogger-Guide 2)

இதற்கு முந்தைய பதிவில் சைட் மேப் வரை பார்த்தோம்.....சென்ற பதிவை காண இங்கு தொடவும்.




இந்த படங்களில் உள்ளது போல் கீழ் ஒரு சைட் மேப் உருவாகி இருக்கும்.
பின் அந்த பக்கத்தில் இருந்து வெளியே வந்து.

Url inspection ஐ தொடவும். பின் உள்ளே சென்று

Inspect என்கிற இடத்தில் தங்களது தளத்தின் முழுமையான சுட்டியை அடித்து உள்ளிடவும்.
அங்கே உள்ள request indexing பொத்தானை அழுத்தவும்.

பின் இந்த படத்தில் உள்ளது போல் got it கொடுக்கவும்.


பின் ஒரு நாளிலோ அல்லது இரண்டு நாட்களிலோ உங்களுக்கு இவ்வாறு Google search console குழுவிடமிருந்து மின்னஞ்சல் வரும்.
இதன் பின் தங்களது தளத்திற்கான தலைப்பைக் கூகுள் தேடு பொறியில் தேடினால் கிடைக்கும்.

இந்த பதிவிலும் கடந்த பதிவிலும்
தொடர்ந்து 
  •   கணக்கு உருவாக்கம்
  •   உரிமையாளர் சரிபார்ப்பு
  •   சைட் மேப் சமர்ப்பித்தல்
  •   கூகுளுக்கு விண்ணப்பித்தல்

முதலியவற்றைப் பார்த்தோம் . இவற்றை ஏன் செய்கிறோம்?  என்பதை இனி காண்போம்.

  • கணக்கு உருவாக்கினால் மட்டுமே கூகுள் சர்ச் கன்சோலோடு நம்மால் நமது வலைதளத்தை இணைக்க முடியும். எனவே நாம் கூகுள் சர்ச் கன்சோலில் கணக்கை உருவாக்கினோம்.
  • கூகுள் சர்ச் கன்சோலில் உள்ள settingsஇல் ownership verification பார்த்தோம். இது அந்த தளத்தில் ஒரே உரிமையாளர் நீங்கள் தான் என்பதை உறுதி செய்து கொள்ள Google search console செய்யும் ஒரு சரிபார்ப்பு ஆகும்.
  • மூன்றாவது சைட் மேப் சமர்ப்பித்தல். சைட் மெப்பின் மூலம் நாம் போடும் பதிவுகள் அனைத்தும் கூகுளுக்கு தெரியும் பதிவுகள் எங்குள்ளது ?என்பதை Google புரிந்து கொள்ளும். சைட் மேப் பற்றி பின் ஒரு நாளில் ஒரு பதிவாகவே பதிவிடுகிறேன்.
  • கூகுளுக்கு நான் அனைத்து தேவையானவற்றையும் செய்து விட்டேன் எனது தளம் கூகிள் தேடு பொறியில் வருவதற்கு தகுந்தது என நாம் கூகுளுக்கு விண்ணப்பிக்கின்றோம் . இதை indexing request என்று அழைப்பர். பிறகு கூகிள் உங்கள் தளம் தகுந்தது என உணர்ந்தால் உங்களது தளம் தேடு பொறியில் காண்பிக்கப்படும்.
கூகிள் தேடு பொறியில் வரவில்லை எனில் நாம் எங்காவது தவறு செய்து இருக்கிறோமா ? என சரி பார்க்க வேண்டும்.

இதன் பின் நான் எழுதும் பதிவுகளில் கூகிள் சர்ச் கன்சோலில் நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்போம்.

இதைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் அந்துவன் தளத்தை பின் தொடருங்கள்.

தங்களுக்கு ஐயம் இருப்பின் கருத்துரை இடுங்கள்.

b>





கருத்துகள்