எளிமையாக தமிழில் எழுதலாம் & பிழைத்திருத்தலாம் / tamil spell checker tools
இக்காலத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் எழுதுவதற்குச் சோம்பல் , தெரியாமல் செய்யும் எழுத்துப் பிழைகள் & இலக்கணப் பிழை , தெளிவான சொல் ஆய்வு திறம் இல்லாமை முதலிய சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். அதை எளிதில் எப்படிச் சரி செய்வது என்பதை இங்குக் காண்போம்.
1. நாவி சந்தி
மேலுள்ள வார்த்தையைக் கூகுளில் உள்ளிட்டுத் தேடவும்.முதலில் வரும் நீச்சல்காரன் தளத்தைச் சொடுக்கி உள் நுழையவும்.நீங்கள் சந்திப்பிழை திருத்த நினைக்கும் பத்திகளைக் காண்பிக்கப்படும் பெட்டியில் படியெடுத்து(Copy) ஒட்டவும்.
பின் ஆய்வு செய் பொத்தானை சொடுக்கவும். அதுவே உங்களுக்குப் பரிந்துரை , மரபுப் பிழை உள்ளவை ,ஒற்றுப்பிழை உடையவை, சந்தேகிப்பவை முதலியவற்றைக் காண்பிக்கும். சம்மதம் என நேரடியாகக் கொடுத்தோ அல்லது சந்தெகிப்பவை எனக் காண்பிக்கப்படும் தடித்த எழுத்துக்களைச் சொடுக்கி பிழை திருத்தி, சம்மதம் கொடுத்தோ உங்கள் பிழையில்லா பத்திகளை நீங்கள் படியெடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
பி.கு: பரிந்துரை, சந்தேகிப்பவை , மரபுப் பிழை, ஒற்றுப் பிழை முதலிய வார்த்தைகளை எந்த நிறத்தில் உள்ளதோ அது சுட்டிக்காட்டும் பிழையுள்ள வார்த்தைகளும் அந்த நிறத்துலேயே காண்பிக்கப்படும்.
2. சுளகு
"நீச்சல் காரன் சுளகு" என நீங்கள் கூகுளில் உள்ளிட்டுத் தேடினால் கிடைக்கப் பெறும் முதல் வலைதளத்தில் உள் செல்லவும். பின் உங்கள் பத்தியை காண்பிக்கப்படும் பெட்டியில் உள்ளிட்டு அங்குக் கீழ் கொடுக்கப் பெற்று இருக்கும் மொத்தம், ஓரெழுத்து, ஈரெழுத்து , பரம்பல், சொல் போன்ற பொத்தான்களைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பத்தியில் சொல் ஆய்வு மேற்கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
3.வாணி
நீச்சல்காரன் வாணி என நீங்கள் உங்கள் கூகுள் தேடுபொறியில் தேடினால் உங்களுக்குக் கிடைக்கப் பெறும் முதல் வலைத்தளத்தின் உள் சென்று உங்களது பத்தியை காண்பிக்கப்படும் பெட்டியில் ஒட்டவும். பின் திருத்துப் பொத்தானை அழுத்தவும் அது உங்களுக்கு எழுத்துப் பிழைகள் மற்றும் சொற்பிழைகள் போன்றவற்றைச் சிவப்பு அடிக்கோடிட்டுக் காட்டும் அந்த அடிக்கோடிட்ட வார்த்தைகளைச் சொடுக்கி சரியான வார்த்தைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். அல்லது தானி என்பதைச் சொடுக்கி பின் திருத்து என்பதைச் சொடுக்கினால் அதுவே தானியங்கி போல் திருத்திக் கொடுத்து விடும். இந்தக் கருவி நாவி சந்தி வேலையையும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் குறிப்பு: இந்தக் கருவி உங்கள் பத்தியின் அளவை பொருத்து சில நொடிகள் எடுத்துக் கொள்ளும் எனவே பொறுத்திருந்து வெளியீட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
4.ஓவன்
நம் பலருக்கும் எழுத்தைச் சீராக்குதலில் பெரிதும் சிக்கல் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த எளிய வழியாக ஓவன் உள்ளது.
இது உங்களது வேறு குறியாக்கதில் இருக்கும் (எ.கா பாமினி) எழுத்துக்களை யுனிகோட் குறியாக்கதிற்கு நமக்குத் தருகிறது. நீச்சல்காரன் ஓவன் எனக் கூகுள் தேடு பொறியில் உள்ளிட்டு தேடவும். பின் காண்பிக்கப்படும் முதல் வலைத்தளத்தின்
உள் சென்று உள்ளீட்டுக் குறியாக்கத்தை தேர்வு செய்து பின்னர்ப் பத்தியை ஒட்டவும். பின் வெளியீட்டுக் குரியாக்கத்தை தேர்வு செய்யவும். பின் சிறிது நொடிகளில் உங்களுக்கு வெளியீட்டை (output) இந்தக் கருவி கொடுத்துவிடும். இது உங்களுக்கு எளிதில் எழுத்துக்களை மாற்றிக் கொடுக்கும். மேலும் உங்களுக்கு எப்படி வேண்டுமோ உள்ளீட்டுக் குறியாக்கம் மற்றும் வெளியீட்டுக்குக் குறியாக்கம் முதலியவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார்த்தையைக் கூகுள் தேடுபொறியில் உள்ளிடுங்கள். உங்கள் திரையில் காண்பிக்கப்படும் வலைதளத்தில் கொடுக்கப் பெற்று இருக்கும் வரவேற்பு தகவலை clear கொடுத்து அழித்து விட்டு மேல் இருக்கும் மொழிகள் பெட்டியில் நீங்கள் பேசப் போகும் மொழியினைத் தேர்வு செய்து பெட்டியின் மேல் இருக்கும் ஒலிவாங்கி (Mic) ஐகானை சொடுக்கி நீங்கள் பேசலாம். நீங்கள் பேசப்பேச அதுவே நேரடியாக எழுதும் அதிலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம், படியெடுத்துக் கொள்ளலாம் மேலும் பல்வேறு அம்சங்களை இது கொண்டுள்ளது.
நீங்கள் யோசிக்கலாம் கூகுள் ஜீ போர்டு உள்ளதே என்று ஆனால் கூகுள் ஜீ போர்டை காட்டிலும் உங்களது பேச்சை தெளிவாக இது புரிந்து கொள்ளும் . எனவே இதைப் பரிந்துரைக்கிறோம்.
முதலில் கொடுக்கப் பெற்று இருக்கும் கருவிகள் நான்கும் ஐயா நீச்சல்காரன் அவர்கள் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
வாசகர்களுக்கு எtதேனும் கருத்துக்கள் இருப்பின் கருத்துரை இடுக.
மிகவும் உதவிகரமான பதிவு தோழா🤩🤝
பதிலளிநீக்குமிக்க நன்றி தோழரே
நீக்குஅருமையான பதிவு தோழரே. இப்பதிவில் எனக்கு நல்ல தெளிவுரை கிடைத்தது. நன்றி தோழரே ♥️
நீக்குநன்றி தோழி
நீக்கு