தமிழ்மொழி மொழிகளின் தாய்



தித்திக்கும் தெள்ளமுதே
பூத்திருக்கும் பைந்தமிழே 
முல்லை போன்ற முத்தமிழே
செழித்திருக்கும்  செந்தமிழே 
கையில் அடங்கா ன்னித் தமிழே
கதகவென ஒளிவீசும் தீந்தமிழே
கொற்கை போற்றிய கொங்குத் தமிழே
னிக்கும் னிமைத் தமிழே
ண்பன் போன்ற ற்றமிழே
கத்தோடு பொருந்திய கத்தமிழே
உம் விரல்களோ பதிற்றுப்பத்து          
முத்துப்பற்களோ முத்தொள்ளாயிரம்
உன் பேச்சு குறுந்தொகை 
பொறுமையோ ஐந்திணை ஐம்பது 
உன் பக்தி தேவாரம் 
புத்தியோ நெடுந்தொகை
உன் குணம் திருப்புகழ்       
உன் நெறியோ நற்றிணை 
மனமோ பாஞ்சாலி சபதம்
உம் அமைதி அகல்விளக்கு அரவணைப்போ குடும்ப விளக்கு 
உமது சொற்கள் இனியவை நாற்பது          
உமதன்பு அகநானூறே !
உமக்கு அணிகலன்களாய்
தலையில் சீவகசிந்தாமணி 
இடையில் மணிமேகலை 
காதில் குண்டலகேசி
கையில் வளையாபதி    
காலில் சிலப்பதிகாரம்
தமிழே!
நீ சாவாய் எனும் நிலை அழிப்பேன்
உன் மேன்மையை பகுக்க நினைக்கும் பிற மொழியை முட்டறுப்பேன்
நீ விதை அல்ல
செடி அல்ல
மரமும் அல்ல
நீயே என் வாழ்வின் வேர்.

                                           - ஆர்லின் ராஜ் அ


கருத்துகள்

  1. பாராட்டு... சிறப்பான வரிகள்..... தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  2. கவிதை மிகவும் அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி தம்பி..
    நின் தமிழார்வமங்கண்டு
    மகிழ்வுற்றேன் நானின்று...
    தமிழ் வளர்த்தார் பல அறிஞர் ...

    இன்று வளர்பாரோ ஒருசிலர்

    தமிழில் நீ என்று அந்துவனாக

    அருந்தொண்டு புரிந்திட வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. தங்களை பெற்றதால் பெற்றது மேலும் புகழ் இந்த இன்ப தமிழ்

    பதிலளிநீக்கு
  5. பிஸ்மில்லாஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும்!
    «அழகான, அழகிய தமிழில், தமிழன்னைக்கு தமிழாபரணங்கள் !»
    -அமீன், ஆம்பூர்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்