தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் விடை என்ன ?
அவன் யார்...?
இங்கு
- தட்டான் - தட்டாமல் கொடுப்பவனாகிய மகாபலி அரசன்.
- சட்டைப் போட்டால்- கொடைக் கொடுக்கவிடாமல் தடுத்தால்.
- குட்டைப் பையன் - வாமன அவதாரம் எடுத்த திருமால்.
- கட்டையால் அடிப்பான்- கமண்டலத்தில் ஓங்கிக் கட்டையால் அடிப்பான்.
விரிவான விளக்கம்:
"தட்டனுக்குச் சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார் ?"
என்னும் இந்த விடுகதையை 23ஆம் புலிக்கேசி படத்தில் வகைப்புயல் வடிவேலு சொல்லக் கேட்டு இருப்போம். இதற்கான விடை திருமால் பற்றிய ஒரு இதிகாசக் குறிப்பு என்று கூறும்போது உங்களால் நம்ப முடிகிறதா???...
மகாபலி என்னும் அரசன் பல்வேறு செல்வங்கள் நிரம்பப் பெற்றுத் தனது நாட்டை ஆட்சி செய்து வந்தார். அவர் கொடை வழங்குவதில் வல்லவர். அவர் தனது நாடு மேலும் செழிப்பு அடையவேண்டும் என்பதற்காக 99 அசுவமேத யாகங்களைச் செய்து முடித்தார். பின்பு நூறாவது அசுவமேத யாகம் செய்யும் பொழுது அவர் தேவர்களுக்கு இணையான செல்வத்தைப் பெற்று விடுவாரோ ? என்ற ஐயத்தில் தேவர்கள் திருமாலின் உதவியை நாடினர். திருமாலோ வாமன(அந்தணர்) அவதாரத்தில் சின்னப் பையன் போல வந்து அவரிடம் சென்று கொடைக் கேட்க சுக்ராச்சாரியார் வாமன அவதாரத்தில் வந்திருப்பது திருமால் என்று உணர்ந்தார். பின் இதை மகாபலியிடம் கூற மகாபலியோ "அவ்வாறு வந்திருப்பது திருமால் ஆக இருந்தால் நான் 100 அசுவமேத யாகத்தின் பயனை இப்போதே பெற்று விட்டேன்" என்று கூறினார். மகாபலி "என்ன கொடை வேண்டும் ?"
எனக் கேட்க திருமால் மூன்று அடி மண்ணைக் கேட்டார். மகாபலியும் ஒப்புதல் அளிக்கக் கமண்டலத்தில் உள்ள நீரைத் திருமாலுக்குக் கொடுத்துக் கொடை அளிக்க நீட்டினார். சுக்கிராச்சாரியார் வண்டு போல் உருமாறிக் கொடை அளிப்பதைத் தடுக்கக் கமண்டலத்தில் நீர்ப் புகும் பாதையை அடைத்துக் கொண்டார். எனவே கமண்டல நீர் வெளி வரவில்லை. சுக்கிராச்சாரியார் இவ்வாறு செய்ததை உணர்ந்த வாமன அவதாரத்தில் வந்திருந்த திருமால் கமண்டல நீர் வெளி வர கமண்டலத்தில் ஓங்கிக் கட்டையால் அடித்தார். இதுவே தட்டானுக்குச் சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் என்னும் இந்த வசனத்தின் பின் இருக்கும் இதிகாசக் குறிப்பாகும்.
பின்
திருமால் வாமன அவதாரத்தில் வான் அளவு உயர்ந்து நின்றார். முதல் அடியில் விண்ணுலகையும் இரண்டாம் அடியில் மண்ணுலகையும் எடுத்துக் கொண்டார். பின் மூன்றாம் அடிக்கு இடம் கேட்டார். அதற்கு மகாபலி தனது சிரத்தை (தலையை) தாழ்த்தித் தன் தலையின் மீது வைத்துக் கொள்ளச் சொல்ல திருமாலும் தனது பாதத்தை வைத்தார். எனவே மகாபலி அரசன் மண்ணுக்குள் புதைந்தாகச் சொல்லப் படுகிறது. மேலும் அவன் பாத உலகில் இருந்து மண்ணுலகம் வந்து மக்களைப் பார்த்துச் செல்வதே கேரள மக்களால் ஓணம் எனப் பெரிதும் கொண்டாடப் படுகிறது எனக் கூறுகின்றனர்.
மேலும் மகாபலியின் கொடையளிப்பதில் தன்னை மிஞ்சியோர் யாரும் இல்லை எனும் ஆணவத்தை அழிக்க இவ்வாறு திருமால் செய்ததாகவும் இதிகாச குறிப்புகள் கூறுகின்றன.
இப்போது நீங்கள் சொல்லுங்கள் யார் அந்த குட்டைப் பையன்???
கமண்ட் பண்ணுங்க பாப்போம்.....
மேலும் படிக்க:
குட்டை பையன் - திருமால்☺️
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் தோழி
நீக்கு