மாணிக்கவாசகர் வரலாறு பகுதி - 1 (பரிகள் நரிகள் ஆன கதை)

மாணிக்கவாசகர்
"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் " எனும் வரிகள் திருவாசகத்தின் பெருமையை பறை சாற்றுகின்றன. அத்தகைய உருகும் வரிகளை பாடியவர் மாணிக்கவாசகர். இவர்  திருவாதவூரில் பிறந்தவர். பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தவர்.இவரது இயற்பெயர் வாதவூரார். இவர் திருவாதவூரில் பிறந்ததால் இப்பெயர் அவருக்கு வழங்கப்பெற்றது. மாணிக்கவாசகர் கல்வி, கேள்வி மற்றும் ஒழுக்கம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார். இவரது எண்ணம் முழுவதும் சிவபெருமானுக்கு தொண்டு செய்வதிலேயே இருந்தது . ஆனால் இவரது அறிவை கண்ட  அரிமர்த்தன பாண்டியன், பாண்டியநாட்டு மன்னன் இவரையே அமைச்சராக நியமிக்க எண்ணினான். மாணிக்கவாசகர் சிவன் பெருமான் மீது பக்தி கொண்டதால் பொன் மற்றும் பொருள் முதலிய ஆசைகளைத் துறந்தவராய் இருந்தார். அரிமர்த்தன பாண்டியன் அவரை அமைச்சராக நியமிக்க அவரோ வேண்டாம் என  முதலில் கூறினார். பின் அவரது வற்புறுத்தலால் மாணிக்கவாசகர் அமைச்சரானார். ஒருநாள் சோழ நாட்டுக்கு திறன் கொண்ட குதிரைகளை வணிகம் செய்ய கடல்வழி வணிகர்கள் வர அதை வாங்க மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான். அவர் திருப்பெருந்துறை என்னும் ஊர் வழியாக செல்லும் போது தன் களைப்பைப் போக்கிக் கொள்ள அங்கு இருந்த குறுந் றுத மரத்தடியில் அமர்ந்திருந்தார். அங்கு சிவபெருமான் முனிவர் வேடத்தில் வந்து அவருக்கு அறிவுரைகளை வழங்கினார் .சிவன் மாணிக்கவாசகரை ஆட்கொள்ள மாணிக்கவாசகர் சிவனுக்காக எழுப்பப்படும் அருள்நாதர் திரு தளத்தை கட்டும் பணிகளில் ஈடுபட்டார். மேலும் அரிமர்த்தன பாண்டியன் தனக்கு கொடுத்த செல்வங்கள் அனைத்தையும் கோயிலின்  குடமுழுக்கின் போது கொடையாக கொடுத்தார். மாணிக்கவாசகர் சென்று பல நாட்கள் ஆனதால் அரசன் ஒற்றர்களை அனுப்பி மாணிக்கவாசகரை பற்றி அறிந்து வர அனுப்பி இருந்தார் .ஒற்றன் மாணிக்கவாசகரை பற்றி தெரிந்துகொள்ள அவர் சென்ற வழியே சென்றான். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை இருப்பதை கண்டு அவரிடம் அரசனுக்கு ஆடி முதல் நாளுக்குள் வாங்கி வர வேண்டிய குதிரைகளைப் பற்றி நினைவூட்டினார். மாணிக்கவாசகர் அப்போது தான் தன்னுடைய சுய நினைவுக்கு வந்தார் சிவபெருமானிடம் சென்ற அவர் குதிரைகளுக்கு நான் எங்கு செல்வேன் என்று கேட்டு அழுதார். சிவபெருமான் அவைகளை நான் தருகிறேன் என்று கூறினார் . நந்தியிடம் இதைப் பற்றி சிவபெருமான் கூற காட்டு நரிகளை காட்டிலிருந்து நந்தி கொண்டு வருகிறார். சிவபெருமான் அந்த நரிகள் அனைத்தையும் குதிரையாக மாற்றினர். அந்த குதிரைகளைையே மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் ஒப்படைத்தார். இரவு நேரத்தில் குதிரைகளாக இருந்த நரிகள் ஊளை இட ஆரம்பித்தன. அரிமர்த்தன பாண்டியன் இவை அனைத்தும் நரிகள் என உணர்ந்து கொண்டான். இந்த கதையைதான் பரிகள் நரிகள் ஆன  கதை என்று கூறுவர்.

வாசகர்கள் தங்கள் கருத்துரைகளையும் மேலும் தங்கள் ஐயங்களையும் கீழே பதிவிடலாம். மாணிக்கவாசகர் வரலாறு பகுதி-2 ( பிட்டுக்கு மண் சுமத்தல்) விரைவில் பதிவிடப்படும்.

கருத்துகள்