மாணிக்கவாசகர் வரலாறு பகுதி - 2 (பிட்டுக்கு மண் சுமத்தல்)

மாணிக்கவாசகரின் வரலாற்றில் "நரிகள் பரிகள் ஆன கதையை" முன்பு பதிவிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சி மற்றும் அதன் இறுதி பகுதி இது.

இதன் முதல் பகுதியை காண இந்த சுட்டியை தொடவும்

தொடர்ச்சி...

மாணிக்கவாசகர் வாங்கிவந்த குதிரைகள் அனைத்தும் காட்டு நரிகள் என்பதை உணர்ந்த அரிமர்த்தன பாண்டியன் அவருடைய உயிரைப் பறிப்பதுவே சரியான தண்டனை என்று எண்ணி அவரைச் சுடுமணலில் நிற்கவைத்து அவரைச் சுற்றி கல் சுவர் எழுப்பச் சொன்னார். மாணிக்கவாசகர் சுடுமணலில் சுற்றி சுவர்கள் இருக்க சிவபெருமானை நினைத்து அழுது வேண்டி கொண்டிருந்தார். சிவபெருமான் மாணிக்கவாசகரை காப்பாற்றுவதற்காக அந்த  நாட்டில் வெள்ளத்தை ஏற்படுத்தினார். வெள்ளத்தால்  சுடுமணல்  தன்னுடையச்  சுடும் தன்மையிலிருந்து  தணிந்தது. வெள்ளம் வந்து அடித்து அவரை  சுத்தி இருந்த சுவர் இடிந்து விழுந்து மாணிக்கவாசகர் அங்கிருந்துத் தப்பித்தார். அந்த வெள்ளத்தை கட்டுப்படுத்த அரிமர்த்தன பாண்டியன் அணைக் கட்ட எண்ணினான். எனவே அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் அணைக்கட்ட முன்வரவேண்டும் என்று முரசறைந்து நாட்டு மக்களுக்கு கூறச் சொல்லி இருந்தான். அரிமர்த்தன பாண்டியனின் நாட்டில் வந்தி எனும் கிழவி பிட்டு விற்றுத் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள். அவளது வீட்டில் அவள் மட்டுமே இருக்க தன் வீட்டிலிருந்து எவ்வாறு ஒருவரை அனுப்புவது? என்ற ஐயத்தில் அந்தக் கிழவி இருந்தாள். அப்போது சிவபெருமான் ஒரு சாதாரண மனிதன் உருவத்தில் வந்து அவருக்கு வந்திக் கிழவி தினமும் பிட்டு அளித்தால் தான் வந்திக் கிழவியின் வீட்டின் சார்பாக அணைக்கட்ட உதவுவதாக கூறினார்.
           பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்

வந்திக் கிழவி அங்கு அவர் கூறியதற்கு இணங்கவே அவர் அணைக்கட்டும் வேலைக்கு சென்றார். அங்கு வேலைக்குச் சென்றவர்  தான் வேலை செய்யாது ஒரு மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்ட அரிமர்த்தன பாண்டியன் அணைக் கட்டுவதற்காக பிறர் வேலை செய்துக் கொண்டிருக்க இவர் மட்டும் படுத்திருப்பதைக் கண்டு கோபம் கொண்டார் . அரிமர்த்தன பாண்டியன்  ஒரு குச்சியை எடுத்து அவரை முதுகில் தாக்கினார். அரிமர்த்தன பாண்டியன் தாக்கியது சிவபெருமானுக்கு வலித்ததோ இல்லையோ ! உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் வலித்தது. அப்போதே அரிமர்த்தன பாண்டியன் இது கடவுளின் திருவிளையாடல் என்பதை அறிந்து  கொண்டான். மாணிக்கவாசகரும் கடவுள் அருள் பெற்றிருப்பதால்தான் அவரை தண்டித்த போது கடவுள் பாண்டிய நாட்டையே தண்டித்தார் என்பதை அரிமர்த்தன பாண்டியன் உணர்ந்தான். இதுவே சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த கதை என்று கூறப்படுகிறது. பின்பு மாணிக்கவாசகர் அங்கிருந்து விலகிப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று சிவதொண்டு ஆற்றி தன்னுடைய மீதமிருந்த வாழ்நாட்களை செலவழித்தார். 
மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமான் எழுத உருவானதே திருவாசகம். அத்தகைய திருவாசகத்தில் உள்ள ஒவ்வொரு வரிகளும் மாணிக்கம் போன்றவை என்று அந்த சிவபெருமானே கூறியதால் தான் இவருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் வந்து இருக்கும் போலும்...

"கடவுள் மனிதனுக்குச் சொன்னது - பகவத் கீதை
மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது  - திருக்குறள் " 
 மாணிக்கவாசகரது வரலாற்றில் முக்கியமான இரு பகுதிகளை இங்கு கண்டோம்

வாசகர்களுக்கு நான் எழுதிய இந்த இரு பகுதிகளிலும் ஏதேனும் ஐயங்கள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் கீழே கருத்துரையிடுக

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்