பூசணிக்காய் விதை கணிதம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கணிதத்தில் கைத்தேர்ந்தவராய் இருந்திருக்கின்றனர். இக்காலக் குவாண்டம் இயங்கியலில் பல்வேறு சமன்பாடுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியேப் பதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் காரி நாயனார் எழுதிய கணக்கதிகாரம் என்னும் தமிழ் கணித நூலில் அவர் அந்தக் குவாண்டம் இயங்கியலை விரைவில் ஒரே சமன்பாட்டைப் பயன்படுத்திப் பதில் கண்டறியும் முறையைக் கூறியுள்ளார். அப்படி அவர் கூறிய பல்வேறு கணிதக் குறிப்புகளில் உங்களுக்காக ஒரு
குறிப்பு :
"கீற்றெண்ணி முத்தித்துத்
கீழறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில்
மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற்
பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"
- காரி நாயனார்
ஒரு பூசணிக்காயை அறுத்துப் பார்க்காமலே அதில் உள்ள விதைகளின் எண்ணிக்கையை அறிய முடியும். ஆம் அதனை இப்பாடல் வழி காரிநாயனார்
நமக்கு கூறுகிறார்.
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளின் (சுற்றி இருக்கும் கோடுகளை) எண்ணிக்கையை எண்ணிக் கொள்ளவும். பாடலின் படி அதை 3,6,5 ஆகிய எண்களால் பெருக்கவும். அதனைப் பாதியாக்கி அதை மீண்டும் மூன்றால் பெருக்கக் கிடைப்பதே தோராயமான விதைகளின் எண்ணிக்கை.
எ.கா:
பூசணிக்காயின் கீற்றுகள் = 7 (எனக் கொள்க)
பூசணிக்காயின் கீற்றுகளை 3,6,5 ஆல் பெருக்கவும் = 7 X 3 X 6 X5 = 630
630ஐ பாதியாக்குவோம் =630/2
=315
315ஐ மூன்றால் பெருக்கவும் = 315x3
தோராயமான விதைகளின் = 945 எண்ணிக்கை
பூசணிக்காயின் கீற்றுகளை 3,6,5 ஆல் பெருக்கவும் = 7 X 3 X 6 X5 = 630
630ஐ பாதியாக்குவோம் =630/2
=315
315ஐ மூன்றால் பெருக்கவும் = 315x3
தோராயமான விதைகளின் = 945 எண்ணிக்கை
வாசகர்கள் தங்களுடைய கருத்துரைகளையும் ஐயங்களையும் கருத்துப் பெட்டியில் பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
I want more like this.....😍
பதிலளிநீக்குThank you so much sago
நீக்கு3,6,5ல் பெருக்கவும் என்பதற்கு பதிலாக 90ஆல் பெருக்கவும் என்று கூறலாமே. எனக்கு பாடாலின் விளக்கம் புரியவில்லை.
பதிலளிநீக்கு3,6,5 ஆகிய எண்கள் பாடலில் தூய தமிழில் குறிப்பிடப் பெற்று உள்ளதால் அதை 90 என கூறினால் பாடலில் உள்ளது போல் வராது என நான் 3,6,5 என குறிப்பிட்டேன்.
நீக்குபாடலின் பொருள் வருமாறு :
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை 3,6,5 ஆகிய எண்களுடன் பெருக்கி 2 ஆல் வகுத்தால் வரும் எண்ணிக்கையை மீண்டும் 3 ஆல் பெருக்கினால் வருகின்ற எண்ணிக்கை பூசணிக்காயின் விதைகளின் எண்ணிக்கையாக இருக்கும்.