இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களுள் ஒருவர். இவர் இடைக்காட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர். எனவே இவருக்கு இடைக்காட்டுச் சித்தர் (இடைக்காடர்) என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இவர் இடையர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டார். இவர் ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டாலும் ஆன்மீகத்தில் இவருக்குப் பெரிதும் ஈடுபாடு இருந்தது. அவர் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியில் சிவனை நோக்கி தானம் செய்து கொண்டிருப்பார். அவர் தவம் செய்து கொண்டிருக்கையில் வான்வெளியில் பறந்து சென்ற கொங்கணச் சித்தர் இவர் தியானம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு கீழே இறங்கி வந்தார். இடைக்காட்டுச் சித்தர் அவருக்கு ஆட்டுப்பாலினை குடிக்கக் கொடுக்கவே அதை வாங்கிப் பருகிய கொங்கணச் சித்தர் மனம் நெகிழ்ந்தார். கொங்கணச் சித்தர் அவருக்குப் பல்வேறு சித்திகளை உபதேசம் செய்தார். பின்பு ஒரு நாள் இடைக்காட்டுச் சித்தர் ஒரு கொடுமையான பஞ்சம் வரப் போவதை உணர்ந்தார். எனவே ஆடு மாடுகளுக்கு எருக்க இலையை உணவாகக் கொடுத்து பழக்கினார். மேலும் குறுவரகு அரிசியினைக் களிமண்ணில் கலந்து வீட்டை சுற்றி ஒரு சுவர் உண்டாக்கினார். அவர் உணர்ந்தது போலவே கொடுமையான பஞ்சம் அவர் இருந்த ஊரை தாக்கியது. ஆடு மாடுகளுக்கு எருக்க இலை கொடுத்ததனால் ஆடு மாடுகள் எருக்க இலையை உண்டு பஞ்சத்தில் இருந்து தப்பிப் பிழைத்தன. மேலும் எருக்க இலையை உண்டதால் ஆடு மாடுகளுக்கு உடம்பெல்லாம் அரிப்பெடுக்கும் எனவே வீட்டை சுற்றியுள்ள களிமண் சுவரை அவை சென்று உரசும். அப்போது அதிலிருந்து உதிரும் குறுவரகு அரிசியை உண்டு இடைக்காட்டுச் சித்தர் பஞ்சத்திலிருந்து பிழைத்தார். இவர் பயன்படுத்திய முறையைக் கண்டு நவகிரகங்களே வியந்தன. நவகிரகங்கள் இவர் வீட்டிற்கு வருகைத் தந்தனர்.
வந்திருப்பது நவகிரகங்கள் என்பதை உணர்ந்த இடைக்காட்டுச் சித்தர் ஆட்டுப் பாலில் வேகவைத்த சோறினையும் ஆட்டுப்பாலை -யும் அவர்களுக்கு வழங்கி உபசரித்தார். இதனை உண்ட நவகிரகங்கள் மயக்கம் அடைந்தனர். இடைக்காட்டு சித்தர் மயக்கமடைந்த நவகிரகங்களை ஒவ்வொரு திசையில் திருப்பித் திருப்பிப் பார்த்தார் இறுதியில் அவர் சரியான திசையில் திருப்பி வைக்கவே மழை பொழிந்தது.

திருமால் பக்தர்கள் இவரிடம் எந்தத் திருமால் அவதாரத்தை வழிபட வேண்டும்? என்று இவரிடம் கேட்க இவரோ இழிச்சவாயன், ஏழை, இடையன் என்று கூறினார். இளிச்சவாயன் என்றால் கோபம் கொண்டு தன் பக்தனைக் காத்த நரசிம்மர், ஏழை என்றால் தனக்குத் தகுதியுள்ள அரச பதவியையும் விட்டு சென்ற ராமர், இடையன் என்றால் ஆடு மாடுகளை மேய்த்த கண்ணன். இந்த மூன்று அவதாரங்களே வழிபடுவதற்கான சரியான அவதாரங்கள் என்று அவர் எண்ணினார்.
இடைக்காட்டுச் சித்தர் கோபம் குறித்துக் கூறுவதாவது:
"உடல் ஒரு பாம்பு புத்துக் கோபம் எனும் பாம்பு நல்லவர் இவர் தீயவர் இவர் என்பது அறியாது கொத்துகிறது"

கருத்துகள்