சிவவாக்கியர்
சிவவாக்கியர் பிறக்கும்போதே "சிவ சிவ" என்று முணுமுணுத்துக் கொண்டே பிறந்தார் எனக் கூறப்படுகிறது. இவரது காலம் மற்றும் இவர் பிறந்த ஊர் எதுவும் வரலாற்றில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. சிவவாக்கியருக்கு "புரட்சி சித்தர்" எனும் சிறப்புப்பெயரும் உண்டு. சிவாவக்கியர் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவர். ஆத்திகராக மாறிய பிறகு
இவர் சிவனின் மீது எல்லையற்ற பக்தி பூண்டார். சிவனுக்குத் தொண்டு செய்வதே தன்னுடைய வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என இவர் கருதினார். இவ்வாறு காலங்கள் செல்ல இவர் தன்னுடைய இளம் வயதை அடைந்த பிறகு தனக்கு குருநாதர் ஒருவரைத் தேடிக் கொண்டு இருந்தார். சிவவாக்கியர் தனது குருநாதரை தேடும் பயணத்தில் காசிக்கே சென்று விட்டார். அதே நேரத்தில் காசி சித்தர் என்னும் சித்தர் தனக்கு ஒரு சீடனையும் தேடிக் கொண்டிருந்தார். காசி சித்தர் செருப்பு தைத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தார். சிவவாக்கியர் காசி சித்தரின் மடத்தை அடையும்போது காசி சித்தர் தன்னுடைய சீடன் வருகை தந்து இருக்கிறான் என்பதை உணர்ந்தார். காசி சித்தரை கண்ட சிவவாக்கியர் இவரே தனக்கு சரியான குரு என்பதை உணர்ந்தவராய் அவரிடம் சென்று தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அதற்கு காசி சித்தர் அவரிடம் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தார். முதலாவது தன்னுடைய கங்கை தங்கைக்கு தான் செருப்பு தைத்து பெற்ற காசை கொடுத்து வருமாறும் இரண்டாவது பேய் சுரைக்காயை தன்னுடைய கசப்புச் சுவை மாறும் படி கழுவிக் கொண்டு வருமாறு கூறுகிறார். சிவவாக்கியர் காசி சித்தர் தன்னிடம் தந்த காசை எடுத்துக் கொண்டு கங்கை நதிக்கு செல்கிறார். கங்கை நதியில் இருந்து ஒரு கை மேலோங்கி வந்து அவர் தருகின்ற காசை பெற்றுக்கொண்டது. இரண்டாவதாக அவர் கூறியபடியே பேய் சுரைக்காயை ஆற்று நீரில் கழுவிய பிறகு அதனை காசி சித்தரிடம் கொண்டு சென்று அவர் கூறியபடியே தான் செய்து விட்டதாகவும் கூறினார். அதற்கு காசி சித்தர் தனக்க கங்கையிடம் சிவவாக்கியர் கொடுத்த காசு திரும்ப வேண்டும் என்று கூறுகிறார். மேலும் தன்னுடைய தோல் பையில் கங்கையின் தண்ணீர் இருப்பதாகவும் அதில் இருந்தே காசை பெற்றுத் தருமாறும் கூறுகிறார். அவர் கூறியபடியே தோல் பையில் உள்ள தண்ணீர் இடம் அவர் கை நீட்ட கங்கையின் நீர் அவருக்கு அவர் கொடுத்த காசை மீண்டும் தருகின்றது. மேலும் காசி சித்தர் சிவவாக்கியர் கையிலிருந்த சுரைக்காயை அவரிடமே கொடுத்தார் அதுமட்டுமல்லாது அவரிடம் சிறிது மணலையும் கொடுத்தனுப்பி எந்தப் பெண் உனக்கு இந்த சுரைக்காயை வைத்து சமைத்துக் கொடுக்கிறாளோ அவளை உன் மனைவியாக தேர்ந்து கொண்டு சிவபெருமானுக்கு தொண்டு செய் என்று கூறுகிறார். சுரைக்காயையும் மணலையும் பெற்றுக் கொண்ட சிவவாக்கியர் அதனை வைத்து சமைத்து தர ஒரு பெண்ணை தேடினார். பெண்கள் சுரைக்காயையும் மணலையும் வைத்து சமைக்க வேண்டும் என்று கேட்டதும் இது முடியாத காரியம் என்று கூறி அவரிடம் இருந்து தப்பி ஓடினர். அவர் ஊர் ஊராய் தனக்கு இந்த சுரைக்காய் சமைத்து தரும் பெண்ணை தேடி அலைகிறார். அவர் ஒர் ஊருக்கு செல்லும்போது குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு மாணல் அடுப்பை ஏற்படுத்தி சுரைக்காயை சுவையாக செய்து கொடுக்கிறார். சுரைக்காயை அமுது போல் சமைத்த தந்த அந்த பெண்ணை "தனக்கு உரியவள்" என்று எண்ணிய சிவ வாக்கியர் சுரைக்காயை உண்டு அவர் பெற்றோர் வரும்வரை அவர் வீட்டிலேயே உறங்கினார். அந்த குறவர் இன பெண்ணின் குலத்தொழில் மூங்கில்களை வெட்டி அதை விற்பதே ஆகும். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வேலை முடிந்ததும் மாலையில் வீடு திரும்பினர். சிவவாக்கியர் அவர்களிடம் அவர்களது மகளை மணக்க விருப்பம் கொண்டு இருப்பதாக கூறுகிறார். ஆனால் அவர்களோ மகிழ்ச்சி அடைந்தாலும் ஒரு சித்தருக்கு எப்படி குறவர் இன பெண்ணை மணம் செய்து கொடுப்பது? என்று நினைத்தனர். இறுதியாக அவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாலும் சித்தருக்கு ஒரு நிபந்தனை விதித்தனர். அந்த நிபந்தனை என்னவென்றால் அவர் குறவர்களின் குலத்தொழிலான மூங்கில்களை வெட்டி விற்கும் தொழிலை தொழிலாக செய்து அவர்களோடு அந்த ஊரில் தங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும். அதற்கு சிவவாக்கியரும் சரி என்று ஒத்துக் கொள்கிறார். திருமணம் செய்து கொண்ட பின் ஒரு நாள் வேலைக்கு சென்ற சிவவாக்கியர் மூங்கில்களை வெட்டும் போது உள்ளிருந்து தங்கத் துகள்கள் கொட்டியது. இதைக் கண்ட சிவவாக்கியர் "பூதம் பூதம்" என கத்தி அங்கிருந்து ஓடினார். அப்போது நான்கு இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்களும் இந்த சிவவாக்கியர் சரியான பித்தன் என்று எண்ணி "ஆம் இது பூதம் தான் விரைவாக ஓடுங்கள்" என்று கூறினர். சிவவாக்கியர் "இந்த ஆட்கொல்லி பூதம் இவர்களை என்னவெல்லாம் செய்யப் போகின்றதோ?" என்று வீடு திரும்பினார். அந்த நான்கு இளைஞர்களும் அந்தத் தங்கத் துகள்களை மூட்டையில் கட்டிக் கொண்டு அதை விற்க நடக்கத் துவங்கினர். போகும் வழியில் நால்வருக்கும் பசி எடுக்க இருவர் உணவு வாங்கச் சென்றனர். உணவு வாங்கச் சென்ற இருவர் இந்த உணவில் விஷம் வைத்து அவர்கள் இருவரை கொன்றுவிட்டால் இந்தத் தங்கத் துகள்களை நாம் சரி பாதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி அந்த உணவில் விஷம் கலந்து கொண்டு போய் அவர்களுக்கு கொடுத்தனர். உணவு உண்ட பிறகு தண்ணீர் தாகம் எடுக்கவே அவர்களுள் வேறு இருவர் நீர் கொண்டுவர சென்றனர். அவர்களும் இந்த விஷத்தை கலந்து விட்டால் இந்த தங்கத் துகள்களை சரிபாதியாக பிரித்து கொள்ளலாம் என்று எண்ணி நீரில் விஷம் கலந்தனர். அதன் விளைவு இறுதியில் நால்வரும் தங்களது உயிரை விட்டனர். எனவேதான் சிவவாக்கியர் அந்த தங்கத் துகள்களை ஆட்கொல்லி பூதம் என்று கூறி ஓடிச் சென்றுள்ளார். சிவவாக்கியர் மூங்கில் வெட்டி விற்பதால் அவரது வருவாய் குறைவாகவே இருந்தது. அப்போது கொங்கண சித்தர் இவரது சிவபக்தியை கண்டு இவரைக் காண இவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் அவரது மனைவி இவரை உபசரித்தார். கொங்கண சித்தர் சிவவாக்கியரின் மனைவியிடம் "வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் அனைத்தையும் கொண்டு வருமாறு" கூறினார். அந்த இரும்பு பொருட்களை கொங்கணசித்தர் தங்கமாக மாற்றி சிவவாக்கியரின் வீட்டைவிட்டு கிளம்பினார். இரும்புகள் அனைத்தும் தங்கமாக மாறி இருப்பதை கண்ட சிவவாக்கியர் "தங்கமாக மாறிய இரும்பு பொருட்கள் அனைத்தையும் கிணற்றுக்குள் போட்டு விடு" என்று மனைவியிடம் கூறினார். அவரது மனைவியும் அவ்வாறே செய்தார். தன் மனைவி மீது சிறிது சந்தேகம் அவருக்கு எழுந்தது. "தன் மனைவியும் ஒரு பெண் தானே அவளுக்கும் தங்கம் ஏதேனும் ஆசை இருக்குமோ?" என்ற ஐயம் அவருக்கு இருந்தது. எனவே அவர் அவரது மனைவியை வீட்டின் முற்றம் அழைத்துச் சென்று அங்கிருந்த குன்றின் மேல் எச்சிலை துப்பினார். பிறகு அவர் அந்த எச்சிலை கழுவும்போது அந்தக் குன்று முழுவதும் தங்கமாக மாறியது. அப்போது அவரது மனைவி "நமக்கு இந்த தங்கம் வேண்டாம் நான் உங்களது மனைவி தாங்கள் எவ்வழியோ நானும் அவ்வழியே" என்று தனக்கு தங்கம் வேண்டாம் என்றும் கூறினார். சிவவாக்கிய அந்த குன்றை பழையது போல் மாற்றினார். அவர் அவரது மனைவி மீது நம்பிக்கை கொண்டார். சிவவாக்கியரும் அவரது மனைவியும் மீதமிருந்த தங்களுடைய வாழ்க்கை நாட்களை ஊர் ஊராய்ச் சென்று சிவதொண்டு செய்துக் கழித்தனர்.
சிவவாக்கியார் |
" நட்டக்கல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியேசுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரமேதடாநட்ட கல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ "
- சிவவாக்கியர்
கருத்துகள்
கருத்துரையிடுக