என் முதல் கல்லூரி வகுப்பு ஆசிரியர்
எங்கள் ஷேரன் சைமன் மேம்முக்காக......
![]() |
I BCOM CA B |
வந்த முதல் நாள் முதல்
எங்களை அன்பால் இழுத்து
பண்பால் உயர்த்தி
அறிவால் அரவணைத்து
பாசத்தால் பாடம் புகட்டி
அறிவையும் ஒழுக்கத்தையும் நேர்கோட்டில் நிறுத்தச் செய்தவர்!வகுப்பில் இறுதி இருக்கையில்
நான் அமர நீங்கள் பாடிய
தாலாட்டு கேட்டு
பலநாள் தூங்கிய தூக்கம்
ஒரு நாள் ஒரு போதும்
இரவு தூக்கத்திற்கு ஈடாகுமா?
நீங்கள் நடத்திய அக்கவுண்ட்ஸ் பாடத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது
டெபிட் வந்தால் கூடவே
கிரெடிட் வந்து டாலி செய்யும் என்று!
ஆனால் நீங்கள் செல்லப் போகிறீர்கள் என்கிற டேபிட்டுக்கு இணையான கிரெடிட்டுக்கு நான் எங்கு செல்வது?
உங்க யாராலும்
டாலி செய்யப்படாதே!
உங்களது வகுப்பில்
நீங்கள் போர்டில்
எழுதிய கணக்குகளை
நான் நோட்டில் எழுதி வைத்திருக்கிறேனோஇல்லையோ?
என் மனதில் எழுதி வைத்திருக்கிறேன் குயவனிடம் களிமண் பானையாகிறது நாங்களும் உங்களிடமே மனிதர்களானோம்!
ஒரு தாய்
ஒரு குழந்தையை
பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறார் ஆனால் நீங்களோ 55 குழந்தைகளை பத்து மாதகாலம்
நெஞ்சில் சுமந்தீர்களன்றோ?
உங்கள் விதைகளை
எங்களுள் விதைத்து விட்டு
நீங்களோ உங்கள்
பயணத்தை தொடங்கிவிட்டீர்கள் பாதைக்கு வெளிச்சம் தந்த
உங்களை பிரிதென்பது
கடினம் தான்
எனினும் இது நம் வாழ்க்கையின்
புது அத்தியாயம்
கோவம் வந்தாலும் நாங்கள் செய்த சேட்டைகளில் கடுப்பானாலும்
முகம் சுளித்து பேசாது
பொறுமையாய் சிரித்தே
அனைத்தையும் சாதிக்கும்
உங்கள் வித்தையோ
ஒரு தனி ஜாலம்!
எங்கே போனாலும் எங்களை(I Bcom CA B)மட்டும் மறந்து விடாதீர்கள்!
என நீங்கள் கட்டாயம் சென்றே ஆகவேண்டுமா? என்ற
ஏக்கத்தோடு நான்
உங்கள் மாணவன் ......
- ஆர்லின் ராஜ் அ
நன்றி பா
நீக்குSuper da😍❤️💯
பதிலளிநீக்குநன்றி பா
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு