நந்திக்கலம்பகமும் நந்திவர்மனும்

தமிழிலுள்ள  96 சிற்றிலக்கிய வகைகளுள் கலம்பகமும் ஒன்று. பலவகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைப் போல் பலவகைப் பாக்களால் தொடுக்கப்பட்ட ப்பாமாலையே கலம்பகம் என்று கூறுவர். 
கலம் + பாகம் = கலம்பகம்.
கலம் = 12 , பகம் = 6.
12+ 6 = 18.
கலம்பகம் பதினெட்டு உறுப்புகளைப் கொண்டது. அவை

  • புயவகுப்பு
  • மதங்கு
  • அம்மானை
  • காலம் 
  • சம்பிரதம் 
  • கார் 
  • தவம் 
  • குறம் 
  • மறம்
  • பாண் 
  • களி 
  • சித்து 
  • இரங்கல் 
  • கைக்கிளை 
  • தூது 
  • வண்டு 
  • தழை 
  • ஊசல் 
                              முதலியவை.
தமிழ் இலக்கியத்தில் பல்வேறு வகையான கலம்பகங்கள் பாடப் பெற்றுள்ளன.
(எ.கா)
  • காசிக் கலம்பகம்
  • மதுரைக்கலம்பகம் 
  • திருக்காவலூர் கலம்பகம் 
  • தில்லைக் கலம்பகம் 
  • நந்திக்கலம்பகம்
  • கச்சிக் கலம்பகம் 
  • திருவருணைக் கலம்பகம்
                                          முதலியவை.
நந்திக்கலம்பகம் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுப் பாடப்பெற்றக் கலம்பக நூல் ஆகும். நந்திவர்மன் தொண்டை நாட்டின் அரசனாக
மூன்றாம் நந்திவர்மன்
மூன்றாம் நந்திவர்மன்
  இருந்தவன். நந்திவர்மனுக்கு உகந்த மாலை தொண்டை மலர் மாலை ஆகும். நந்திவர்மனின் நாடானது எழில் கொஞ்சும் செழிப்பான நாடாக விளங்கியது என்பதை நந்திக்கலம்பக பாடல்கள் வழி அறியலாம். அங்கே மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் செல்வத்திற்கு குறைவில்லாது நந்திவர்மனின் ஆட்சியில் வாழ்ந்தனர். அவரது நாட்டில் இரவலர்கள் என்ற வார்த்தைக்குப் பொருள் இரவில் அலர்கின்ற அல்லிப்பூவே தவிர உதவி பெறுவோர் அல்ல (இரந்து வாழ்பவர் அல்ல) என்று நந்திக் கலம்பகத்தை இயற்றிய புலவர் தம் பாடல் வழி உணர்த்துகிறார். தன்னுடைய நாட்டில் இரந்து உண்போரே இல்லாத வகையில் நந்திவர்மன் மக்களுக்கு கொடையளித்து வள்ளலாக வாழ்ந்துள்ளார். அதற்குச் சான்று:

      "இந்தப் புவியில் இரவலருண்
                                       டென்பதெல்லாம்
      அந்தக் குமுதமே அல்லவா-நந்தி
       தடங்கைப்பூ பாலன்மேல்                                                           தண்கோவை பாடி 
       அடங்காப்பூ பலரா னார்"

நந்திவர்மனின் நாட்டில் மக்கள் அணிந்திருக்கும் காதணி, மூக்கணி, தலையணி மற்றும் மாடமாளிகைகளும் மாட விளக்குகளிலும் முத்துக்கள் இடம்பெற்றிருக்கும்.  நந்திவர்மனின் நாட்டில் முத்துக்களுக்குப் பஞ்சமே கிடையாது. தொண்டைநாடு முத்துவளம் மிக்க நாடாக விளங்கியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நந்திவர்மன் தமிழ்மீது தீராக்காதல் கொண்டிருந்தான். நந்திவர்மன் ஒருநாள் இரவில் மாறுவேடத்தில் வீதிஉலாச் சென்றபோது ஒரு வீட்டில் பெண் ஒருத்திப் பாடும் குரல் கேட்டது. அந்த பாட்டின் நயத்தை உணர்ந்த நந்திவர்மனின் மனதில் அந்தப்பாடல் ஆழப் பதிந்தது . நந்திவர்மன் அந்தப் பெண்ணை மறுநாள் வீரர்களை விட்டு அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னான். நந்திவர்மன் அந்தப் பெண்ணிடம் இந்தப் பாடலைப் பற்றி நந்திவர்மன் வினவ அந்தப் பெண்ணோ "இந்தப்பாடல் தன் வீட்டிற்கு விருந்தினராக வருகை தந்திருந்த ஒரு புலவரால் பாடப்பெற்ற பாடல் " என்று கூறினார். நந்திவர்மன் அந்தப் புலவரை உடனே கண்டு மீதமிருக்கும் பாடல்களையும் கேட்டு விட வேண்டும் என்று ஆர்வம் கொண்டான். வீரர்கள் அந்தப் புலவரைச் சென்று அழைத்து வந்தனர். நந்தி கலம்பகம் நூறு பாடல்களைக் கொண்டு தன் மீது பாடப்பெற்ற கலம்பக நூல் ஆகும் என்பதை அறிந்த நந்திவர்மன் மீதமிருக்கும் கலம்பக பாடல்களையும் தான் கேட்கவேண்டும் என்று அவரிடம் கூற அவரோ "மன்னா இந்த நூறு பாடல்களை நீங்கள் கேட்டால் உங்கள் உயிர் உடலைவிட்டு பிரிந்து விடும் என்று அவரை எச்சரித்தார் ". அவர் மட்டுமல்லாது அமைச்சர்களும் வேண்டாம் என்று கூற அப்போதும் "என் உயிர் என்னை விட்டுப் பிரிந்தாலும் சரி நான்  ஒரு நல்ல கவிச் சுவைமிக்க தமிழ் பாடல்களைக் கேட்டே என் உயிரை விடுவேன்" என்று நந்திவர்மன் விடாப்பிடியாய் நின்றான். அந்தப் பாடலை நந்திவர்மன் கேட்கும் பொருட்டு 100 தென்னை ஓலை பந்தல்களை அவர்கள் உருவாக்கினர். முதல் பாடல் புலவர் பாடி முடித்தபின் அவர் முதல் பந்தலில் இருந்து எழுந்து இரண்டாம் பந்தலுக்கு சென்று மாறி அமர்ந்தார் முதல் பந்தல் தீப் பற்றி எரியத்
துவங்கியது. இது போலவே ஒவ்வொரு பாடலைப் பாட இவர் அடுத்த பந்தலுக்கு மாறி அமர பின் அவர் முன்பு அமர்ந்திருந்த பந்தல்கள் பற்றி எரிந்தன. இவ்வாறு அவர் 99வது பாடலை கேட்ட பின் நூறாவது பந்தலில் ஈமக் கட்டைகளில் நடுவே அமர்ந்தார். அந்தப் புலவன் நூறாவது பாடலை பாடினான். அவன் பாடிய பாடல் பின்வருமாறு:

"வானுறு மதியை அடைந்ததுன்                                                                             வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி 
  கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்                  தேனூறு மலராள் அரி இடம்                                                                                 புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்                  நானும் என்கலியும் எவ்விடம்                                                                             புகுவோம் 
நந்தியே நந்தியா பரனே"
                            
இந்தப் பாடலின் பொருள் யாதெனில் உமது முகஒளி நிலவை சென்றடைந்தது.  உமது புகழ் கடலை சென்றடைந்தது. காட்டில் வாழும் புலியை சென்றடைந்தது. உமது கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள் கற்பக மரத்தை சென்றடைந்தது. உன்னுடன் தங்கியிருந்த திருமகள் திருமால் இடமே சென்றடைந்தாள். உமது உடம்பையும் நெருப்பு எடுத்துக்கொண்டது. இனி நானும் என்னுடைய கலியும் யாரிடம் செல்வோம்? நந்தியே என் தந்தைப் போன்றவனே!
                              என்பதாகும்.
 இந்தப் பாடலை பாடிய உடனே நந்திவர்மனை சுற்றியிருந்த ஈம கட்டைகள் எரியத் தொடங்கின. இறப்பதற்கு முன் இத்தகைய கவிச் சுவைமிக்க பாடலைப் பாடிய புலவரிடம்  நந்திவர்மன் தன்னுடைய நாட்டையே அவருக்குக் கொடையாக தருவதாக  கூறினார் . இதன்பின் நந்திவர்மன் தன்னுயிரை நீத்தான். கலம்பகத்தில் உள்ள நூறு பாடல்களை முழுமையாக கேட்டால் அவன் உயிர் துறப்பான் என்று பிறர் எச்சரித்தும் ஒரு கவிச்சுவை மிக்க தமிழ் பாடலை கேட்டுத் தான் உயிரை விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நூறு பாடல்களைக் கேட்டு நந்திவர்மன் தன் உயிரை நீத்தான்.
நந்திவர்மன் தமிழுக்காக உயிர் நீத்த மன்னன் என்ற பெயர் ஒருபோதும் தமிழ் சிற்றிலக்கிய வரலாற்றிலிருந்து மறையவே மறையாது. இந்த நூறுப் பாடல்களை இயற்றிய புலவர் யார் என நமக்கு தெரியவில்லை. எனினும் தமிழ் ஆர்வலர்கள் சிலரால் இந்தப் புலவரால் நந்திவர்மனை வீழ்த்தி அரசாட்சியைத் தன்வசம் மாற்றியமைக்க பின்னப்பட்ட சதியே இந்த கலம்பக பாடல்கள் ( நந்திக் கலம்பகம் )என்று கூறப்படுகிறது. மேலும் அந்தப் புலவர் இவருக்கு மாற்றான் தாயின் மகனாக இருக்கலாம் என்ற ஐயமும் சில தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது. பல்வேறுப் போர்களில் யாராலும் வெற்றிக் கொள்ள முடியாத வீரச் சிறப்பினை உடைய நந்திவர்மனை தன் பாடலால் அந்தப் புலவர் வீழ்த்தினார். புலவர் முதல் பாடலில் இருந்து இறுதி பாடல் வரை நந்திவர்மனைப்பற்றி தவறாக ஒரு வார்த்தை இயற்றி பாடி இருக்கமாட்டார். அவரது கொடைத் தன்மை பற்றியும் வீரச் சிறப்புகளைப் பற்றியும் அவர் எழுதியது நமக்குத் தெரியும் ஆனால் இதன் பின்விளைவுகள் எதிர்மறையாக நந்திவர்மனைத் தாக்கியிருந்தது. இதற்கு காரணம் இந்த நந்திவர்மனை வீழ்த்த அவனை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு புலவர் பாடல் இயற்றியதால் அந்த எண்ண அலைகளால் இவை நிகழ்ந்தன என்பதே உண்மை. மேலும் இந்த பாடலில் நச்சு எழுத்துக்களின் பயன்பாடு இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றி கலம்பகம் பாடி உயிரை பறிக்க முடியுமா? என்கிற உங்கள் கேள்விக்கு பல்வேறுச் சான்றுகளை இதன் பின் வரும் பல்வேறு பதிவுகளில் கூறுகிறேன்.

வாசகர்களுக்கு எதேனும் ஐயங்களோ அல்லது கருத்துரைகளோ இருந்தால் கருத்துரையிடுக


கருத்துகள்