சிறந்த இலவச எஸ் ஈ ஓ கருவிகள் - 1 / free seo tools -1
SEO கருவிகள் என்றால் என்ன???
SEO என்பதன் விரிவாக்கம் Search Engine Optimization ( தேடு பொறி மேம்படுத்தப்படுதல்) என்பதாகும். நமது தளத்தின் பார்வையாளர்களை அதிக படுத்துத்தலே இதன் முதன்மை நோக்கம்.
நமது தளத்தை ஏற்றவாறு வடிவமைப்பதன் மூலம் நமது தளத்தை தேடு பொறிக்கு விரைவில் கிட்டும் வகையிலும் அதிகமான பார்வையாளர்கள் உள்நுழையும் வகையிலும் மேம்படுத்தலாம்.
Search Engine Optimization is the way toward developing the quality and amount of site traffic by expanding the perceivability of a site or a site page to clients of a web crawler.
இதை எவ்வாறு செய்வது?
இதை நாம் கீழ் கொடுக்கப் பெற்று இருக்கும் இலவச மென்பொருள்களை பயன்படுத்தித் தங்களது தளத்தைத் தேடு பொறியில் மேம்படுத்தலாம்.
இவை அனைத்தும் நீங்கள் கூகுளில் தேடினாலே எளிதில் கிட்டும்.
1.Page Speed Insights
எந்தவொரு தளத்தைத் திறந்தாலும் அந்தத் தளம் 5 வினாடிக்குள் திறக்க வேண்டும். அவ்வாறு தளம் திறக்க வில்லையெனில் உள்ளே வரும் பார்வையாளர் சலிப்படைந்து வெளியே செல்லக் கூடும்.
அதை சோதிக்கும் கருவியே இந்தக் கருவி. இந்த கருவியில் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் முடிவாக வந்தால் நமது தளம் சரியாக இயங்குகிறது என்று பொருள். சுட்டியை (URL) உள்ளீடு செய்து analyze ஐ கிளிக் செய்தால் அது சரி பார்த்து விடும். இந்தக் கருவியில் கணினியில் எவ்வாறு தளம் திறக்கும் ? / திறன் பேசியில் எவ்வாறு
திறக்கும் ? என்பதை காணலாம். மேலும் அதுவே சரி செய்யவேண்டியவற்றையும் முடிவு பக்கத்தின் கீழே காண்பிக்கும். இது கூகுள் சர்ச் கான்சோலின் வசதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
2.Seoptimer
இந்தக் கருவி நமது பக்கத்தை தணிக்கை(audit) செய்து நமது தளத்தின் சரியான செயல்திறன் தரத்தை (Performance grade) கொடுக்கும். நமது தளச் சுட்டியை உள்ளிட்டு audit ஐ கிளிக் செய்தால் போதுமானது. அங்கு காட்டப்படும் முடிவுகளை வைத்து நாம் நமது தளத்தில் தேவையானவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். முடிவுகள் பக்கத்தில் கீழ் செய்யவேண்டிய மாற்றங்கள் கொடுக்கப் பெற்றிருக்கும்.
3. Zadroweb auditor
இந்த தளத்திலும் சென்று தங்களது தளச் சுட்டியை கொடுத்து analyze ஐ கொடுத்தால் இந்தத் தளத்தில் நமது தளத்திற்கு செய்ய வேண்டிய மாற்றங்களை அதுவே முடிவுகள் பக்கத்தில் கீழே பல்வேறு முடிவுகளைக் காண்பிக்கும். இவை அனைத்தும் ஒரு தோராயமான கணக்கிடுதல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
4.GTmetrix
இந்தத் தளம் நமது தளத்தின் பக்கத்தின் வேகத்தை கணக்கிட பயன்படுத்தப் பெறுகிறது. இது இணைய நெரியாளர்களால் பெரிதும் பயன்படுத்தப் பெறுகிறது. இந்த தளத்தில் நமது சுட்டியை இட்டு analyze ஐ கிளிக் செய்தால் சிறிது காலம் எடுக்கும். பின் உங்களுக்கு முடிவுகள் காட்டப்படும். உங்களுக்கு பல்வேறு முடிவுகளையும் உங்களது தளத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை இந்தத் தளம் காட்டும்.
5.SEO site checkup
இந்தத் தளத்திலும் நீங்கள் தங்களது தளத்தின் சுட்டியை உள்ளிட்டு check up ஐ கிளிக் செய்தால் நமது தளத்தில் தேவைப்படும் மாற்றங்களையும் அதை சரி செய்வதற்கான முறைகளையும் கூறிவிடும். அந்த செய்யப்பட வேண்டிய மாற்றங்களை முடிவு பக்கத்தின் கீழே காணலாம்.
இந்த தளங்களுக்கும் தமிழ் அந்துவன் தளத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
பின்குறிப்பு: இந்த முடிவுகள் அனைத்தும் தோராயமான முடிவுகளே. இந்தத் தளங்களில் ஒரு முறை சோதித்தப் பின் மீண்டும் அடுத்த முறை சோதித்தால் முடிவுகள் மாறக் கூடும்.இதன் வாயிலாக நமது பக்கம் சார்ந்த முடிவுகளுக்கு நாம் வரலாம்/ செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் நாம் அறியலாம்.
வாசகர்களுக்கு ஐயங்கள் இருந்தால் கருத்துரையிடவும்.
அருமை சகோ
பதிலளிநீக்குநன்றி நண்பா
நீக்கு