கொன்றதும் வென்றதும்




நோய்தொற்றால்  ஊரடங்கு 
ஊரே அடங்கியது...
ஆனால் பசி அடங்கிய பாடில்லையே..
 பசியின் மயக்கத்தில் கண்கள்  சொருகியவர்களாய் காதுகள் அடைத்தவர்களாய் உடல் மெலிந்தவர்களாய்....
அடுத்த வேளை உணவுக்கே 
வழி இல்லா அன்றாடங்காச்சிகள்
பசிக்கு எதைச் சாப்பிட ?
பணக்காரரைப் போல் வயிறுடன் பிறவி எடுத்ததால் தானோ என்னவோ? 
பணக்காரர்களுக்கு வரவேண்டிய பசி இவர்களை தாக்குகிறது ..
கொரோனா நுரையீரலைத் தாக்கியது                                                                 என்றால்
 பசி வயிற்றைத்  தாக்குகிறது !
 தண்ணீர் குடித்து குடித்து 
 வயித்தை  இவர்கள் நொப்பினாலும் 
 பிள்ளைக்குப் பால் கொடுக்க 
 தாய்க்கு நீர் போதுமா?....
 உணவு இவர்களுக்கு கனவு மட்டும்                                                             தான் போலும்...
கனவிலாது உணவு உண்ணலாம் என்ற                    ஏக்கத்தாேடு பல குழந்தைகள்....
தூக்கத்திலிருந்து எழவே கூடாது என                                  எண்ணும் பெரியோர்கள்...
இவர்கள் கொரோனா நோயாளிகள்                                                                              அல்ல
பசிப்பிணி நோயாளிகள்
ஆடியவன் எவனும் அடங்கித்தான் ஆக வேண்டும்
ஆனால் இங்கே பசி அடங்காமல் அடங்குபவரே பலர்
 ஊர் அடங்கியது (ஊரடங்கு)உண்மை என்றால்
 அவர்கள் பசி ........?
கொன்றது கொரோனாவா? பசியா?
வென்றது மனிதமா? பட்டினியா ?


                                              
                                       - ஆர்லின் ராஜ் அ


கொராேனவால் இறந்து விடுவோமோ என்னும் பயத்தை விட பசியால் இறந்துவிடுேமோ என்னும் பயேமே ஏழைகளை கொல்கிறது. 
             
 
  "முடிந்தவரை பசியில் வாடுவோருக்குத் தயவுகூர்ந்து உதவுங்கள்" 
இது என் வாசகர்களுக்கு நான் விடுக்கும் சிறிய  வேண்டுகொள்.🙏🙏🙏


வாசகர்கள் தங்கள் ஐயங்களையும்  
கருத்துக்களையும் கருத்துரையிடுக



கருத்துகள்

  1. தாங்கள் இதுபோன்று தொடர்ந்து சமூக வரிகளையும் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன் தோழரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்