How to get more views on blogger ? / பிளாக்கரில் பார்வையாளர்களை அதிகரிப்பது எப்படி ?



தற்கால பிளாக்கர் நிலை:

 இன்றைய காலக்கட்டத்தில் பிளாக்கர் பற்றிய அறிவு பலரிடம் இருந்தாலும் பலரும் அவர்களது சொந்த வலைப்பூக்களில் எவ்வாறு பார்வையாளர்களை அதிகரிப்பது ?என்னும் ஐயம் கொண்டு உள்ளனர். தன்னுடைய தளத்தில் பார்வையாளர்கள் இல்லை என்பதற்காக வலைப்பூவை விட்டு சென்றவர்களும் உண்டு.

பார்வையாளர்களை அதிகரிப்பது எப்படி?

ஒரு பிளாக்கரை எடுத்து கொண்டால் அந்த பிளாக்கரில் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கு 5 முக்கிய வழிகள் உள்ளன.

அவை பின் வருவன:

1. சமூக வலைத்தளங்கள்:
                உங்களது வலைப்பூவை சமூக வலைத்தளத்திற்கு கொண்டுச் சேருங்கள். உங்கள் வலைப்பூவின் சுட்டியை (link) நீங்கள் முகநூல் , பின்டிரஸ்ட் , கோரா போன்ற பல்வேறு சமூகதளங்களில் பதிவிடலாம். இதன் மூலம் உலக மக்கள் அனைவரும் உங்கள் தளத்தை படிக்கச் செய்யலாம்.




2. தள  உள்ளடக்கம்  
உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் தனித்துவமான உள்ளடக்கங்கள் உங்களது பார்வையாளர்களைப் பெரிதும் அதிகரிக்க உதவும். திருடப்பட்ட உள்ளடக்கங்கள் கட்டாயம் விரைவில் நீக்கப்படும். உள்ளடக்கத்தில் எளிமையான சொற்களை கையாளுங்கள்.


3. பதிவின் தலைப்பு
  எந்தப் பதிவாக இருந்தாலும் நீங்கள் கொடுத்திருக்கும் பதிவின் தலைப்பு வாசகர் தேடு பொறியில் தேடும் வார்த்தைக்கு ஒத்ததாக இருக்க வேண்டும். தலைப்பு சரியாக கொடுக்கப்பட்டு இருந்தால் கூகுள் சர்ச் கன்சோல் அதன் வேலையை பார்த்துக் கொள்ளும். தலைப்பை பற்றி பின் வரும் பதிவுகளில் தெளிவாக பதிவிடுகிறேன்.


4.தனித்தன்மை
உங்களது தளத்தில் உங்களுக்கான நிச்சே (Niché) வை பின்பற்றுங்கள். Niché என்பதற்கு உங்களது தளத்தில் நீங்கள் பதிவிடும் பதிவின் வகை என்பது பொருள்.

எ.க:

 Quizzzspot - இந்த தளத்தில் புதிர் போட்டிகள் சார்ந்த பதிவுகள் மட்டுமே இடப்படும்.

தமிழ் அந்துவன் தளத்தில் கணினி சார் தகவல்களும் பிற தமிழ் சார் தகவல்கள் மட்டுமே இடப்படும்.

இது போன்று உங்கள் தளத்திற்கு ஒரு கொள்கை கடைபிடியுங்கள். தொடர்பு இல்லா பதிவுகளை இடாதீர்கள்.

5. படங்கள்
பதிவுகளில் ஏதேனும் ஒரு படமாவது இணையுங்கள். வாசகருக்கு நீங்கள் பதிவிட்டு இருக்கும் கருத்துக்களின் உண்மை தன்மையை உணர வைக்க ஒரு படமாவது தேவைப்படும். எந்த ஒரு வாசகரும் பதிவுகளில் எழுத்துக்கள் மட்டும் இருப்பதை விரும்பமாட்டார்கள்.



வாசகர்களுக்கு எதேனும ஐயம் இருப்பின் கருத்துரை இடவும்.

கருத்துகள்

  1. நல்ல பதிவு தோழரே👌

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு மற்றும் எளிமையான பதிவு🤝💙

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக