இணையவழியில் இலவசமாக கற்பிக்கும் தளங்கள் & செயலிகள் / best online learning sites


"கற்றது கை அளவு கல்லாதது உலகளவு"

இந்த உலகில் உள்ள நாம் அனைவரும் எவ்வளவு தான் சேர்த்தாலும் ஒரு நாளும் குறையாதது கல்விச் செல்வம். நாம் கல்லாதது உலகவளவு உள்ளது.நமது கல்வியை நாம் எளிய முறையில் இந்த நவீனக் காலத்தில் வீட்டில் இருந்த படியே இணைய வசதியின் உதவியோடு  படிக்கலாம். இதனை நாம் படிப்பதில் நமக்குப் பலன்கள் பற்பல. இன்றைய பதிவில் இலவசமாகப் படிக்க நமக்கு உதவும் 5 இணையதளங்களை (சில செயலிகளாகவும் உள்ளன) காண்போம்.


1. Udemy

இந்த இணையதளம் நமக்குப் பல வகையான தொடக்க நிலை (Beginner) வகுப்புகளை இலவசமாக வழங்குகிறது. இந்தத் தளம் நமக்குச் செயலியாகவும் (App) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தளம் அடிப்படை வகுப்புகள் மட்டுமின்றிப் பிற நிலை வகுப்புகளையும் கட்டணத்தோடு வழங்குகிறது. இது மக்களிடையே வழங்கி வரும் மிகவும் பிரபலமான சேவையாகும்.

2. Coursera:
இந்த இணையதளம் செயலியாகவும் வழங்கி வருகிறது. மேலும் இந்த இணையதளம் Udemy போல் பல்வேறு இலவச வகுப்புகளை நமக்கு வழங்குவதோடு கட்டணச் சேவையில் வைத்திருக்கும் வகுப்புகளைப் பணம் செலுத்தி வாங்க முடியாத எளிய மாணவர்களுக்கு உதவியாக (தகுந்த காரணங்கள் கொடுப்பின் ) வகுப்புகளை இலவசமாகவே வழங்குகிறது.

3. Guvi :
இந்தச் சேவை இணையத்தளம் மற்றும் செயலியாகவும் வழங்கப் படுகிறது. இது காணக்கிடைக்காத பல்வேறு  வகுப்புகளை  தங்கள் தாய் மொழிகளில் கற்பித்து கல்வியை வழங்குகிறது.

4. solo learn:
இந்தத் தளம் அனைத்து வகுப்புகளையும் இலவசமாக வழங்குகிறது. இது கணினி சார் மொழிகள் C , C++, DS , Front End ,Back end, algorithm போன்ற மொழிகளை எளிதில் கற்க உதவுகிறது. மேலும் இது செயலாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5. Code academy :
கணினி சார் நிரலாக்க மொழிகளான (Programming Languge) Java, Go, JavaScript, Ruby, SQL, C++, Swift, and Sass, HTML போன்ற CSS மொழிகளை நமக்கு இலவசமாக இந்தத் தளம் தருகிறது. இஃது இணையச் சேவையாகவும் செயலாகவும் இதன் சேவையைத் தற்போது வழங்குகிறது.

பின் குறிப்பு :

  • மேல் உள்ள ஐந்து தளங்களையும் துவக்கிப் பயன்படுத்த அந்தந்தத் தளங்களில் ஒரு கணக்குத் துவங்குவது இன்றியமையாதது.
  • மேல் கொடுக்கப்பட்டிருக்கும் தளங்களில் எந்தத் தளத்தில் நீங்கள் படித்தாலும் சான்றிதழ்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


 எதேனும் ஐயங்கள் இருப்பின் கருத்துரை இடுக

கருத்துகள்

கருத்துரையிடுக