இலவச ஆன்லைன் எடிட்டர்ஸ் (How to edit photos and videos by free online editors ?)


இன்றைய வாழ்க்கையில் புகைப்படம் மற்றும் ஒளிக்கோபபுகளை தொகுப்புகள்  செய்வது என்பது நமக்கு மிகப் பெரிய ஒரு சுமையாக உள்ளது. எனவே உங்களுக்குப் பயன் உள்ளதாய் இருக்குமென இந்தப் பதிவை எழுதுகிறேன்.



விரைவில் புகைப்படங்கள் , ஒளிக் கோப்புகள் (Video Files) , விளம்பரத் தாள்கள் முதலியவற்றைத் தொகுக்க உதவும் ஐந்து இலவச இணையச் சேவைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.


( இணையச் சேவைகளைச் சென்றடைய  அதன் உள் பக்கத் தலைப்பைச் சொடுக்கவும்) 


1. Invideo.io

இந்த இணையச் சேவை நமக்கு இணையத்தில் இருந்தவாரே Instagram ,Whatsapp, Facebook , Twitter முதலிய சமூகத் தளப் பதிவுகளை வடிவமைக்கவும் காட்சியளிப்புகளை (Presentation ) வடிவமைக்கவும் உதவுகிறது. மேலும் நாம் இணையவழியில் நமது ஒளிக் கோப்புகளையும் (Video Files) தொகுத்துக் கொள்ளலாம்.

Online editor 1



2. Pixlr

இந்த இணையச் சேவை நமது புகைப்படங்களைத் தொகுக்க (Photo Edit) நமக்குப் பெரிதும் உதவுகிறது. இந்தத் தளம் நெட்டைசன்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இணையச் சேவை நமது புகைப்படங்களை நமக்குத் தேவைப்படுவதைப் போல் தொகுக்க உதவுவது மட்டுமல்லாது.

Online editor 2


3.Biteable

இந்தத் தளம் பெரிதளவில் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் இது மிகவும் பயனுள்ளத் தளமாக உள்ளது. இந்தத் தளம் நமக்குப் புதிய ஒளிக் கோப்புகளை உருவாக்குவதில் பெரிதும் உதவுகிறது.

Online editor 3



4. Poster my wall

இந்தத் தளத்தின் உதவியோடு இணையத்தில் இருந்தாரே நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான விளம்பரத் தாள்களை (Poster) உருவாக்கி அதை நாம் பதிவிறக்கிப் பயன் படுத்திக் கொள்ளலாம்.இந்தத் தளம் எந்த ஒரு கட்டணமும் அதற்கு விதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Online editor 4


5. Canva

இந்தத் தளம் நமக்குச் செயலாகவும் இணையதளமாகவும் உள்ளது. எனினும் இணையதளமாகப் பயன்படுத்துவதைக் காட்டிலும் செயலியாகப் பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இந்தச் சேவையில் கோடிக்கணக்கான வார்ப்புருக்களை (Templates) நமக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தளத்தின் உதவியோடு கீழ் கொடுக்கப் பெற்று இருக்கும் அனைத்துச் சேவைகளையும் இலவசமாகச் செய்து கொள்ளலாம்.

  1. Invitation (அழைப்பிதழ்)
  2. YouTube Art
  3. YouTube Thumbnail
  4. Facebook post (முகநூல் பதிவு)
  5. Instagram stories ( படவரி பதிவு)
  6. Twitter posts (கீச்சகப் பதிவு)
  7. Logo ( இலச்சினை)

இவை மட்டுமல்ல மேலும் அறியச் செயலியையோ இணையதளத்தையோ அணுகவும்.

பின் குறிப்பு :இவை அனைத்தையும் இணையத்தில் இருந்தே இயக்கலாம்.



உங்களை கவர்ந்த இயங்களைத் தொகுப்பிகளைக் கீழே கருத்துரை இடுங்கள்.


கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்