5 Intresting websites that are unbelievable / 5 வியப்பூட்டும் வலைத்தளங்கள்


இன்றைய காலத்தில் அதிகமாக நாம் அனைவரும் புத்தகங்களில் தேடுகிறோமோ இல்லையோ இணையத்தில் அதிலும் இணையதளங்களில் தேடுகிறோம். நமக்குப் பயன்படும் வகையில் பல்வேறு இணையங்கள் இன்று உள்ளன. அவற்றுள் மிகவும் உதவிகரமான வியப்பூட்டும் 5 இணையதளங்களை இன்று காண்போம்.

( இங்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் இணையதளங்களைக் கூகுளில் தேடியோ அல்லது இந்தப் பதிவின் அந்தந்தப் பத்தியின் உள் தலைப்பில் சொடுக்கியோ பயன்பெறலாம்)




1. Internet Live Stats

இன்றைய காலத்தில் அனைவரும் இணையத்தில் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுகின்றோம். அதே போல் இவ்வுலகில் எத்தனை பேர்த் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர் என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் நம்முள் இருக்கும். அதற்கு இந்தத் தளம் பெரிதும் உதவுகிறது. மேலும் இது எத்தனை கூகுள் தேடல்கள் நடந்துள்ளன, எத்தனை இணையப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர், எத்தனை பதிவுகள் முகநூல் , கீச்சகம் ( Twitter) & வலைப்பூக்களில் (Blog) பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை இங்கு நேரலையாகக் காணலாம்.




2. Social Blade :

இந்த இணையதளத்தின் தேடல் பகுதியில் நாம் எந்த வலைகாட்சியை  ( YouTube  channel )  தேடினாலும் அவர்களது மாதாந்திர வருவாய் மற்றும் ஆண்டு வருவாய் முதலியவற்றை அறியலாம். மேலும் இது கீச்சகம் (Twitter) மற்றும் படவரி (Instagram)  பயனரின் பெயரை (ID) உள்ளிட்டு தேடினால் அவர்களது பயனர் பக்க புள்ளி விவரங்களை அறியலாம்.



3. Entitree
இந்த இணையதளம் உங்களுக்குப் பிரபலம் ஆனவர்களின் குடும்ப அட்டவணையை மரம் போன்ற வடிவத்தில் தரும் சிறப்புடையது. இந்த இணையதளத் தேடு பொறியில் நீங்கள் எந்தப் பிரபலத்தைத் தேடினாலும் உங்களுக்கு அவர்களது குடும்ப அட்டவணை மர வடிவில் கிடைக்கும். அங்குக் கொடுக்கப் பெற்று இருக்கும் பொத்தான்களைப் பயன்படுத்தி நீங்கள் அடுத்த அடுத்தத் தலைமுறையை யோ அல்லது முந்தைய தலைமுறையை யோ காணலாம். ( பொத்தான்கள் திரை விரியும் போது காணலாம். எனவே கை விரல்களை வைத்தோ அல்லது அங்குக் கொடுக்கப் பெற்று இருக்கும் + பொத்தானை விரிவு செய்து காண்க).




4. 10 min mail :

இது மிகவும் சிறப்பான ஒரு மின்னஞ்சல் சேவையாகும். இந்தத் தளத்தில் உள் நுழைந்தால் போதுமானது அதுவே உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரியும் உள்பெட்டியையும் அதன் கீழே உருவாக்கி வைத்திருக்கும். 10 நிமிடங்களில் அந்த மின்னஞ்சல் தன்னைத்தானே அழிதுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு அந்த மின்னஞ்சல் முகவரி வேண்டாமேனில் அந்தப் பக்கத்தைப் புதுப்பிக்கவும்(Reload or Refresh) புது முகவரி உங்களுக்குக் கிடைக்கும்.



5. Mathway :

இந்த வலைத்தளம் நமது அனைத்துக் கணிதவியல் சந்தேகங்கள் மற்றும் வேதியியல் சமன்பாடுகள் சார்ந்த கேள்விகள் முதலியவற்றுக்குத் தெளிவான விடையை நமக்கு இந்தத் தளம் தருகிறது. இது மிகவும் பயனுள்ளத் தளமாகப் பலர் ( முக்கியமாக மாணவர்கள் & ஆசிரியர்கள்) கருதுகின்றனர்.


இந்தப் பதிவில் எதேனும் ஐயங்கள் இருந்தால் கருத்துரை இடவும்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்