ஐந்து உதவிகரமான வலைதளங்கள் / Most useful websites

 பல்வேறு பதிவுகளுக்கு உங்களின் ஆதரவைத் தொடர்ந்து .....

ஐந்து உதவிகரமான வலைதளங்களைப்
பற்றி இந்த பதிவில் காண்போம்.


Useful websites .thamizhandhuvan
( இங்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் இணையதளங்களைக் கூகுளில் தேடியோ அல்லது இந்தப் பதிவின் அந்தந்தப் பத்தியின் உள் தலைப்பில் சொடுக்கியோ பயன்பெறலாம்)


1.  Down for everyone or just me:
இந்தத் தளத்தில் நாம் வேண்டிய தளத்தின் சுட்டியை (Website Url) கொடுத்தால் அந்தக் குறிப்பிட்டத் தளம் நமது உலாவியில் (Browser) வராமல் இருக்கிறதா அல்லது அனைவருக்கும் வராமல் இருக்கிறதா என்பதை நாம் தெரிந்துக் கொள்ளலாம். இது நம்முள் பலருக்கும் தெரியாத சேவை.

Useful websites.thamizhandhuvan


2. Photo Creator :

இந்த இணையதளம் நமக்கு ஒரு படத்தை உருவாக்க உதவுகிறது. இந்தக் காலத்தில் எல்லாப் படங்களையும் காப்புரிமையை ஆய்வுச் செய்தே பதிவேற்ற வேண்டியுள்ளது. இத்தகைய காலத்தில் நமக்கு இணையத்தில் இருந்தவாரே புகைப்படங்களை உருவாக்க இந்தத் தளம் உதவுகிறது.

Useful websites.thamizhandhuvan


3. Translatr :

இந்தத் தளத்தின் உதவியோடு ஒரே நேரத்தில் அதிகப்படியாக 8 மொழிகளில் உள்ளிட்டச் சொற்றொடர்களை நாம் பெற இயலும். இந்தத் தளத்தில் 50 யிற்கும் மேற்ப்பட்ட மொழிகள் கொடுக்கப் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Useful websites. thamizhandhuvan


4. Time and date :

இந்தத் தளம் நமக்கு நேரம் மற்றும் நாள் சார்க் கணக்குகளை எளிய முறையில் கணக்கிட உதவுகிறது. மேலும் கடினமான நாள்கணக்குகளைக் கூட நாம் விரைவில் கணக்கிட முடிவது இந்தத் தளத்தின் முக்கியச் சிறப்பு.

Useful websites. Thamizhandhuvan


5. GifYT :

இந்தத் தளத்தில் வேண்டிய யூடியூப் காணொளியின் சுட்டியை (Youtube Video Link) உள்ளிட்டாலும் (Enter) அந்தக் காணொளியில் இருந்து GIF உருவாக்கிப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.



உங்கள் மனம் கவர்ந்த வலைதளத்தைப் பற்றி கருத்துரை இடுங்கள்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்