ஆசிரியர் தின கவிதை / Tamil poem on teacher's day

திறந்த புத்தகமாய்
வாழ்க்கை மாணவனாய்
இருட்டில் நடந்து செல்கிறார்கள்
                                                இவர்கள்.....
பின் வரும் தன் மாணவனுக்குப்
வாழ்க்கைப் பாதைத் தரவேண்டி...

தீக்குச்சிகள் எப்போதும் முழு வெளிச்சத்தைத் தருவதில்லை ....
நெருப்பைத் தன்னிடமிருந்து
மெழுகுவர்த்திகளுக்கு
வாராக் கடனாய்க் கடத்துகின்றன.....
ஆம் இவர்கள் தீக்குச்சிகள் ....
எண்ணத்தால் உயரியத் தீக்குச்சிகள்...
அறிவுத் தீயை 
நமக்குள் கடத்தும் தீக்குச்சிகள்.....

பிறந்த நொடிமுதல்
தாய்த் தொப்புள்கொடி உறவு
தந்தை உயிர்க்கொடி உறவு....
ஆனால் இவர்களது உறவு வித்தியாசமானது...
அன்பாகப் பேசுவதால்
அன்னை என்பதா ?
தன்னம்பிக்கைத் தரப் பேசுவதால்
தந்தை என்பதா ?
யாருக்குத் தெரியும் கண்ணாகக் கண்மணியாக நம்மை நெறிப்படுத்தும் கடவுளாகக் கூட இருக்கலாம்......

ஒரே நேரத்தில் உலக நூற்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பது சாத்தியமாகிறது...
வீட்டுபாடத்தை விட வாழ்க்கைப்பாடம் தந்த இந்த நவீனப் பிரம்மாக்களால் ....
அவர்களை விட இந்த
பிரம்மன் தருவது உருவமல்ல
இந்த வாழ்க்கைச் சிற்பிகளான அவர்கள் தருவதே நம் உருவம்......

மறு உருவத்தைத் தந்துவிட்டு
கருவம் இன்றி
அடுத்தப் பொம்மைக்கு உருவத்தை
தரக் கிளம்பி விடுகிறார்கள் இவர்கள்
நேரத்தைக் கடந்து..........


- ஆர்லின் ராஜ் அ

"அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்."




கருத்துகள்

கருத்துரையிடுக