வாழ்க்கைக்கு தேவையான இணைய வலைத்தளங்கள் / awesome websites in 2020

 சென்ற பதிவில் நாம் பார்த்தது போன்றே இந்தப் பதிவிலும் 5 உதவிகரமான வலைதளங்களைப் பற்றிக் காண்போம்.

இந்தப் பதிவின் துணைத் தலைப்புகளை (Sub Heading) கூகுளில் தேடினாலே அந்த வலைத்தளங்களை உங்களுக்குக் கிடைக்கும்.



1. Zamzar:
இந்த வலைத்தளம் நாம் எந்த வகையான கோப்பை (File) பதிவேற்றம் (upload) செய்தாலும் அதனை நாம் கேட்கும் வடிவத்திற்கு (Format) அல்லது நீட்சிக்கு (Extension) மாற்றித்தரும்.
அனைத்து வகை நீட்சி மற்றும் வடிவத்திற்கு இது கோப்பை மாற்றிதரும் என்பது குறிப்பிடத்தக்கது.


2. Resume.io:
உங்களுக்கு உடனியாக ஒரு தற்குறிப்பு (Resume) எழுத வேண்டுமெனில் இந்தத் தளத்தில் சென்று நீங்கள் இணைய வழியாகவே உங்களது தற்குறிப்பு / சுயவிவரத்தை (Bio Data) எழுதலாம். ஓர் எளியத் தற்குறிப்பை விரைவில் உருவாக்கலாம். வலைத்தளத்தின் உள் சென்று வார்ப்புருவை (template) தேர்ந்து எடுத்துப் பின் நீங்கள் இணையத்தில் இருந்தபடியே தற்குரிப்பை வடிவமைக்கலாம்.







3. Background remover:
இந்த வலைத்தளம் நமது புகைப்படங்களின் பின்புலத்தை ( Background) அழித்து நமக்குப் பிடித்த பின்புலத்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது. நாம் கோப்பினைப் பதிவேற்றி அழி(Remove ) கொடுத்தோம் எனில் அது தானாகவே பின்புலத்தை அழித்து நாம் செப்பனிடும்( Edit) வகையில் நமக்குத் தரும் அதை நாம் செப்பனிட்டுப் பின் பதிவிறக்கம் ( Download) செய்து கொள்ளலாம்



4. Y2mate (YouTube) and Save from net facebook  video downloaders:

-> முதலில் Y2mate என்னும் வலைத்தளம் நமக்கு வலைக்காட்சி (YouTube) காணொளியைப் பதிவிறக்கம் செய்ய உதவுகிறது. பதிவிறக்கம் செய்ய விரும்புகின்ற காணொளியின் சுட்டியை (Link) தேடு பொறியில்(search box) ஒட்டித் தேடினாலே போதுமானது.



-> அடுத்து Save from net என்னும் இந்தத் தளமும் மேல் உள்ளதைப் போன்றே முகநூலில்(Facebook) பதிவிடப்பட்ட அந்தக் காணொளியின் சுட்டியை(Link) இங்குக் கொண்டு வந்து ஒட்டித் தேடினாலே போதுமானது.



5. Virus Total :
இந்தத் தளத்தின் வாயிலாக உங்கள் கோப்புகளில் நச்சியம் (Virus) உள்ளதா என எளிதில் கண்டுபிடித்து விடலாம். அந்தக் கோப்பினைப் பதிவேற்றி அதில் நச்சியம் உள்ளதா எனக் கண்டறிந்துக் கொள்ளலாம்.


ஏதெனும் ஐயங்கள் இருந்தால் கருத்துரை இடவும்.

ஐந்து வியப்பூட்டும் இணையதளங்கள் காண சொடுக்கவும்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்