பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குல சேகரனை!!!
அது என்ன ???
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குல சேகரனை என்னும் வாக்கியத்தை வசனமாக நாம் 23ஆம் புலிகேசி படத்தில் கேட்டிருப்போம்.
அதன் இதிகாசக் குறிப்பு இதோ:
கலியுகத் தொடக்கத்தில் திருமால் இலட்சமி தேவியை மணக்க குபேரனிடம் கடன் வாங்கினார். பின் அந்தக் கடனை அடைக்க அவரால் இயலாது போகவே பொருள் ஈட்ட ஒரு ஸ்தலம் தேவைப் பட்டது. எனவே அவர் வராகப் பெருமாளிடம் கேட்க வராகப் பெருமாள் கோயில் கொண்டு இருந்த திருப்பதி ஸ்தலத்தை வராகப் பெருமாள் திருமாலுக்கு அளித்தார். திருப்பதியில் எழுந்தருளி பின் ஈட்டிய செல்வத்தைக் குபேரனுக்கு வழங்கி திருமால் தன் கடனை வழங்கினார்.
- பன்றிக்கு நன்றி சொல்லி - வராகப் பெருமாளுக்கு நன்றி சொல்லி
- குன்றின் மேல் ஏறி நின்றால் - திருப்பதியில் எறி நின்றால்
- வென்றிடலாம் குல சேகரனை - திருமாலின் குலத்தைச் செழிக்க வைத்த வனாகிய குபேரனை வென்றிடலாம்.
- ஆதி வராக பெருமாள் கோவில் திருப்பதியில் இருப்பது இதற்கு ஒரு சிறந்த சான்றாக உள்ளது.
வடிவேல்்
பதிலளிநீக்குஆமாம் சகோ
பதிலளிநீக்குநன்று
பதிலளிநீக்குநன்றி நண்பா
பதிலளிநீக்கு