Cool tricks on google (ஆச்சர்யமான கூகுள் சேவைகள்)
கூகுள் நிறுவனம் பல்வேறு வகையான சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றனர். அந்த சேவையில்
இன்றைய பதிவில் (Cool tricks on google) சில பயன்மிக்க சேவைகளையும் வியபூட்டம் சில வெகுளியன சேவைகளையும் இங்கு காணப் போகிறோம்.
1. Set a timer :
இந்த வார்த்தையை கூகுளில் உள்ளிட்டு(Enter) தேடவும். உங்கள் திரையில் டைமேர் ஒன்று வரும் அதை வைத்து தங்களுக்கு வேண்டிய நேரத்தை பொருத்திக் கொள்ளலாம். இந்த சேவையில் ஸ்டாப்வாட்ச்சும் (நிறுத்தற்கடிகாரம்) இருக்கிறது என்பது கூகுளின் தனிச்சிறப்பு.
2. Askew :
இந்த வார்த்தையை கூகுளில் உள்ளிட்டு தேடவும். Askew என்பதன் பொருள் சாய்ந்த இருத்தல்.அதன் பொருளைப் போலவே அந்த வார்த்தை காண்பிக்கப்படும் பக்கமும் சாய்ந்திருக்கும்.
3. Flip a Coin :
நாம் குழந்தை பருவம் முதல் இதுவா ? அதுவா ? என்ற கேள்வியில் சிக்கிக் கொள்வோம். அந்த ஐயத்தை (Doubt) போக்க ஒரு ரூபாய் நாணயத்தை நாம் சுண்டிவிட்டது உண்டு.இனி நாம் இணையத்தில் கூட ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டலாம். மேலுள்ள வார்த்தையை கூகுளில் தேடவும். அங்கு flip என இருப்பதை கிளிக் செய்யவும்.
4. Google Sphere:
இந்த வார்த்தையை கூகுளில் உள்ளிட்டு தேடும் போது வருகின்ற முதல் இணையதளத்தை (website) கிளிக் செய்யவும். பின் திரையில் வருகின்ற கூகுள் தேடு பொறியில் உள்ளீடு(Enter) செய்யும் பெட்டியை சொடுக்கவும்.
5. Calculator:
இந்த வார்த்தையை கூகுளில் உள்ளிட்டு தேடவும். உங்களுக்கு கூகுள் இணையத்தின் உதவியோடே கூகுள் கால்குலேட்டரை தருகின்றது. அனைத்து வகையான அறிவியல் சார்ந்த கணக்குகளையும் எளிமையாக இந்த கால்குலேட்டர் உங்களுக்கு செய்து தருகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக