Whatsapp Tricks in Tamil

இன்றைய பதிவில் வாட்ஸ்அப்பில் யாரும் அறிந்திராத ஐந்து முக்கியமான வாழ்க்கையில் உதவும்  விஷயங்களைக் காணப் போகிறோம்.
வாட்ஸ்அப்பின் தமிழ் பெயர் புலனம். இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லாத திறன் பேசியை (ஸ்மார்ட் போனை) எங்கும் காணமுடியாது. வாட்ஸ்அப் 2009ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தனது சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வாட்ஸ்ஆப்பில் உள்ள 5 சிறப்பான அம்சங்களைக் காணப் போகிறோம்.

Whatsapp Tricks in tamil


  • வாட்ஸ் அப்புக்கு போடுங்க பூட்டு
  • கணினியில் வாட்ஸ்அப்
  • பாஸ் கொஞ்சம் தூக்கி காட்டுங்க வாக்கியத்த
  • மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
  • தனித்தனியா போட்டு விடுவோம்


5.தனித்தனியா போட்டு விடுவோம் :

ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்த அம்சம் மிகவும் சிறப்புமிக்கது. நீங்கள் ஒரு செய்தியை பிறருக்கு பகிர அவரது எண்ணிற்கு அனுப்பவீர்கள். இதுவே ஐந்து பேருக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டுமெனில் குழு அமைக்க வேண்டும். ஆனால் இந்த அம்சம் ஒரு செய்தியை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் தனித்தனியாக அனுப்ப உதவுகிறது. தனித்தனியாக அவரது சேட் செய்யும் பக்கத்திற்கே செய்தி போய் விடும்.
இதைப் பயன் படுத்த New Broadcast   --> வேண்டிய நபர்களைத் தேர்ந்து எடுக்கவும் --> குழு போல் உருவாகும் (குழு அல்ல)
அங்கு நீங்கள் போடும் எந்தச் செய்தியாக இருந்தாலும் எல்லாருக்கும் தனித்தனியாக அவர்களது சேட் பக்கத்திற்கே சென்று விடும்.
Whatsapp Tricks in tamil



4. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ? :
நீங்கள் ஸ்டேட்டஸ் கட்டாயம் வைக்காமல் இருக்கமாட்டீர்கள். இன்னொருத்தரின் ஸ்டேட்டசை மறைந்திருந்து நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள் என்று அவருக்குத் தெரியாத வண்ணம் பார்க்க வேண்டுமா....???
உங்கள் (settings)அமைப்புகளில் --> Account --> Privacy --> Read Receipts ( இதை அணைக்கவும்)
பின் நீங்கள் யாரது ஸ்டேட்டஸ் பார்த்தாலும் அவர்களுக்கு நீங்கள் பார்த்தது போல் காட்டாது

3. பாஸ் கொஞ்சம் தூக்கி காட்டுங்க வாக்கியத்த :

நீங்கள் உங்களது செய்திகளைப் பகிரும் போது சில செய்திகளை மேற்கோள் இட (Quote செய்ய) நினைப்பது உண்டு. அதற்கும் வாட்ஸ்அப்பில் சில குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் மேற்கோள் இடப்பட வேண்டிய வாக்கியத்தின் முன்னும் பின்னும் " * " பயன்படுத்தினால் உங்கள் வாக்கியம் தடிமனாக(Bold) தெரியும்.
Whatsapp Tricks in tamil



மேலும் ஒரு வாக்கியத்தைச் சாய்வாகக் காட்ட "_" இந்தக் குறியீட்டை உங்கள் வாக்கியத்தின் முன்னும் பின்னும் பயன்படுத்தினால் உங்கள் வாக்கியம் சாய்வாக(Italic) தெரியும்.
Whatsapp Tricks in tamil



வாக்கியங்களை அடித்துக் காட்ட வாக்கியங்களின் முன்னும் பின்னும் " ~ " பயன்படுத்த வேண்டும்.
Whatsapp Tricks in tamil





" ``` " இந்தக் குறியீட்டை வாக்கியத்தின் முன்னும் பின்னும் உள்ளிட்டால் உங்கள் வாக்கியம் இது போல் அமையும்.
Whatsapp Tricks in tamil




2. கணினியில் வாட்ஸ்அப்:

உங்கள் வாட்சப்பை கணினியிலும் உங்களால் இயக்க முடியும். கணினியில் கூகுள் தேடு பொறியில்" web.whatsapp.com" எனத் தேடவும். காட்டப்படும் க்யு.ஆர் குறியீட்டை (Q.R Code) தங்களது திறன் பேசியில் வாட்ஸ்அப்பை திறந்து whatsapp web ஐ சொடுக்கி காட்டப்படக் குறியீட்டை ஸ்கேன் (Scan) செய்யவும்.


1. வாட்ஸ்அப்புக்கு போடுங்க பூட்டு :

உங்களது வாட்ஸ்அப்பைப் பிற இயங்களைத் திருடர்கள் (online theives ) நெருங்காமல் இருக்க வாட்ஸ் அப்பில் நீங்கள் என்ன தான் திறன் பேசியில் பூட்டுப் போட்டாலும் அவர்கள் எளிமையாக உங்கள் தகவல்களைத் திருடி விடுவார்கள். இதைத் தடுக்க
Settings (அமைப்புகள் ) --> Privacy --> Two step verification ஐ ஆன் செய்யவும்.
பின் அது கேட்கும் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவு எண்களை (Password) உள்ளிடவும்.
பின் குறிப்பு : கடவு எண்களை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும்.

இவற்றைப் பயன்படுத்திப் பயன் பெறுவீர்.....


ஐயம் இருப்பின் கருத்துரை இடுவீர்.....


மேலும் படிக்க :

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்