How to crack the coding interview / நிரல் சார் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுகள்
Crack coding Exams
இன்றைய உலகில் எந்தக் கணினிசார் நேர்முகத் தேர்வுக்கு (interview) சென்றாலும் பல்வேறு நிரல் மொழிகளைப் (Programming languages) பற்றிய கேள்விகளே அதிகமாகக் கேட்கப்படுகின்றன.அவற்றை நாம் கற்றிருந்தாலும் நேர்முகத் தேர்வில் பல்வேறு குழப்பங்களில் விடைகளை மறந்து விடுகிறோம். அவ்வாறு நிறுவனங்களின் நிரல்கள் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிமையாக நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளும் வகையில் உதவும் ஐந்து முக்கியத் தளங்களை How to crack coding interview என்னும் இந்தப் பதிவில் காண்போம்.
How to crack the coding interview / நிரல் சார் வேலைவாய்ப்புகள் தேர்வுகள். |
1. leetcode.com
இந்தத் தளம் நிரல்கள் சார் தேர்வுகளுக்கு (Coding based interview) பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாது இவர்கள் நடத்தும் போட்டிகளில் சிறப்பாகப் பங்களிபவர்களுக்கு (participants) பிரபல நிறுவனங்களில் வேலைகளையும் வாங்கிதருகின்றனர் . மேலும் இந்தத் தளத்தில் முதலில் நீங்கள் இணையச் சமூக ஊடகங்கள் போல இதிலும் கணக்கு ஆரம்பிப்பது இன்றியமையாதது.மேலும் இவர்கள் 14 நிரல் மொழிகளுக்கு (programming languages) மேல் இவர்களது தளத்தில் பயிற்சிக்குத் தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தளம் நிரல் மொழிகளைக் கற்பிப்பதோடு மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களில் கணினி சார் / நிரல் சார் வேலைவாய்ப்புகளை (Coding related job opportunities) பற்றியும் இவர்கள் தளத்தில் கூறுகின்றனர். இவர்கள் நமக்குப் பல்வேறு வகையாக உதவும் பல்வேறு அறிவுரைகளையும் அவர்கள் தளத்தில் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தளத்தில் உள்புக (Sign in) உங்களுக்கு ஒரு கணக்கு இன்றியமையாதது. மேலும் இந்தத் தளத்திலும் பல்வேறு பெரும் நிறுவனங்கள் இளைஞர்களை வேலையில் அமர்த்தக் காத்திருக்கின்றன.
இந்தத் தளத்தில் கீழுள்ள தலைப்புகளில் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.
- Algorithms
- Data Structures
- Mathematics
- C
- C++
- Java
- Python
- Ruby
- Linux Shell
- Functional Programming.
இந்தத் தளம் தொழில் நுட்பம் சார் மற்றும் நிரல் சார் கேள்விகளை (Technical and coding related questions) மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்திற்கு வழங்கி வருகிறது. மேலும் இந்தத் தளம் எழும் சந்தேகங்கள் அனைத்திற்கும் அனுபவம் மிக்க நிரல் மொழிக் கற்றோர் வழி பதில் தருகின்றது.
மேலும் படிக்க :
கருத்துகள்
கருத்துரையிடுக