Popular Google Doodle Games - New

கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியின் லோகோவை (Search Engine Logo) பல்வேறு உலகத்தில் அனைவராலும் கொண்டாடப்படும் தினங்களுக்கு (International Celebrated Days) ஏற்றவாறு தனது லோகோவை வடிவமைத்து அந்தத் தினத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அந்தத் தினம் முழுவதும் வடிவமைத்த லோகோவை தனது தேடு பொறியின் பக்கத்தில் காண்பிப்பார்கள். இதனை Google Doodle எனக் கூறுவார்கள். இது எல்லா நாட்களிலும் இருக்காது. இது பொதுவாக அந்தக் குறிப்பிட்டக் கொண்டாட்ட நாளில் மட்டுமே காண்பிக்கப்படும். இந்தப் பதிவில் அந்த Google Doodle சார்ந்து கூகுள் வெளியிட்டுள்ள விளையாட்டுக்களைப் (Popular google doodle games new) பற்றிக் காண்போம்.

Popular Google Doodle Games new


இந்த Google doodle விளையாட்டுகளை விளையாட Popular google doodle games எனத் தேடினால் போதும் விளையாடி மகிழலாம்.


  • Coding Carrot
  • Cricket
  • Fischinger
  • Rockmore
  • Garden Gnome 
  • Scoville
  • Lotería
  • Halloween cat
  • Hip Hop
  • Pac man

Popular google doodle games - New

1. Coding Carrot

நாம் 10,11,12 வகுப்புகளில் கண்டிப்பாக ஆங்கிலம் படிக்கும் போது road map படித்திருப்போம். அதே போலத் தான் இந்த விளையாட்டிலும் காண்பிக்கப்படும் முயலுக்கு அதன் இரையான கேரட்டை உண்ண உதவ வேண்டும். கீழ் உள்ளப் பெட்டியில் முயலின் முகம் கொண்ட ஒரு சின்னச் சதுரம் இருக்கும். அந்தப் பெட்டியின் கீழ் இருக்கும் சதுரங்களை முயல் செல்ல வேண்டிய திசைக்கு (Direction) ஏற்றவாறு முயலின் முகம் கொண்ட சதுரத்தொடு இணைத்து விட்டு Play பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். முயல் சரியாக அனைத்து இரையையும் சாப்பிட்டால் நீங்கள் வெற்றி பெறலாம். 
New Popular google doodle games No 1.

Popular Google Doodle Games new


2. Cricket

இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு. திரையின் நடுவில் காண்பிக்கப்படும் மட்டையின் சின்னம் இருக்கும் பட்டனை (Bat Symboled button) பந்து வரும் போது சரியாகக் கிளிக் செய்ய வேண்டும்.
New popular google doodle games No 2.

Popular Google Doodle Games new


3. Fischinger

இது ஓர் ஒலி எழுப்பும் விளையாட்டு விரல்களைப் பயன்படுத்தி நாம் திரையில் தொட்டால் ஒலி எழும்.இந்த விளையாட்டில் நாம் அந்த ஒலி எழுப்பும் கருவிகளைக் கூட மாற்றிக் கொள்ளலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. இது குழந்தைகளைச் சமாதானம் செய்யக்கூட உங்களுக்கு உதவலாம். முயற்சித்துப் பாருங்களேன்.
New popular google doodle games No 3.

Popular Google Doodle Games new


4. Rockmore

இந்த விளையாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் கீபோர்டு கீ களை அழுத்தினால் அங்குத் திரையில் இருக்கும் பெண்மணி அந்த இசைக் கேற்ப மெட்டுப் போட்டுக்காட்டுவார். இதுவும் ஒரு குழந்தைத்தனமான விளையாட்டுத் தான். இது கிளாரா ராக்மோர் (Clara Rockmore) என்னும் இசைக் கலைஞரைப் பெருமைப்படுத்த உருவாக்கப்பட்டது.
New popular google doodle games No 4.

Popular Google Doodle Games new


5. Garden Gnome

வெளிநாடுகளில் Gnome எனும் பொம்மைகள் வீடுகளில் அழகுக்காக வைக்கப்படும். அந்தப் பொம்மைகளைத் தூக்கி எறிதலே இந்த விளையாட்டு. இந்த விளையாட்டு Angry Bird விளையாட்டுக்கு ஒத்தாக இருந்தாலும் Angry Bird விளையாட்டில் பறவைகள் பன்றிகளின் கோட்டைகளை அழிக்கும். இங்கு அந்தப் பொம்மைகள் உயரப் பறந்து அங்கு நிர்ணயம் செய்யப் பட்டு இருக்கும் தூரத்தைக் கடக்க வேண்டும்.
New popular google doodle games No 5.

Popular Google Doodle Games new

6.Scoville

இது மிளகாய்களுடன் ஆன விளையாட்டு. ஐஸ் கிரீம் தனது ஐஸைத் தூக்கி அடித்து மிளகாயை ஆராய்ச்சி செய்பவரைக் காப்பாற்ற வேண்டும். இது சிறிது குழந்தைத் தனமான விளையாட்டுத் தான்.
New popular google doodle games No 6.

Popular Google Doodle Games new

7.Lotería

இந்த விளையாட்டில் காண்பிக்கப்படும் சீட்டு அட்டைகள் உங்கள் அட்டைகளோடு பொருந்தினால் பொருந்திய அட்டையின் மீது பீன்ஸ் விதைகளை வைக்க வேண்டும். யார் பீன்ஸ் விதைகளை மேலே இடப் பக்கத்தில் காண்பிக்கப்பட்டு இருக்கும் வடிவத்தில் யார் முதலில் அமைத்து Lotería பட்டனை அழுத்துகிறார்களோ அவரே வெற்றியாளர். நீங்கள் உங்கள் நண்பர்கள் உடன் கூட இதை விளையாடலாம் என்பது இந்த விளையாட்டின் தனிச் சிறப்பு.
New popular google doodle games No 7.

Popular Google Doodle Games new

8. Halloween cat

இந்த விளையாட்டில் ஒரு பூனை இருக்கும் அதைச் சுற்றி வருகின்றன பூதங்களை அழிக்க அந்தப் பூதங்களின் தலைகளில் இருக்கும் வடிவங்களைத் திரையில் நீங்கள் வரைந்து அந்தப் பூதங்கள் இடமிருந்து அந்தப் பூனையைக் காப்பாற்ற வேண்டும்.
New popular google doodle games No 8.

Popular Google Doodle Games new

9. Hip Hop

இந்த விளையாட்டில் ரெண்டு இசைத் தட்டுகள் இருக்கும். அதைத் தேய்த்து DJ Jockey போல நாம் இசை அமைத்து விளையாடலாம்.
New popular google doodle games No 9.

10.Pac man

இந்த விளையாட்டு நாம் சிறு வயதில் விளையாடிய விளையாடிய Pac man யின் ஒரு திறன் பேசிப் பதிப்பு (Version) ஆகும்.
நீங்கள் இதைக் கண்டிப்பாக விளையாடி இருப்பீர்கள்.
New popular google doodle games No 10.

Popular Google Doodle Games new






குறிப்பு : Play பட்டனை அழுத்த மறவாதீர்


மேலும் படிக்க :





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்