சிக்னல் ஆப் பாதுகாப்பானதா ?

சிக்னல் ஆப் பாதுகாப்பானதா ? 

வாட்ஸ்அப் சமீபத்தில் தனது தனியுரிமைக் கொள்கையை மாற்றப் போவதாகக் கூறியுள்ளது. அதன் புதுப்பிக்கப் பட்ட தனியுரிமைக் கொள்கை பிப்ரவரி 8,2021 முதல் நடைமுறையில் இருக்கும் எனவும் வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது. எனவே வாட்ஸ்அப் பயனர்கள் பலரும் வாட்ஸ்அப்பில் இருந்து சிக்னல் ஆப்பிற்கு மாறி வருகின்றனர். இந்தப் பதிவில் அந்த சிக்னல் ஆப் பாதுகாப்பானதா ? (Is signal App safe ? ) என்பதைப் பற்றிக் காண்போம்.

சிக்னல் ஆப் பாதுகாப்பானதா ?
Signal App vs whatsapp

வாட்சப்பிற்கு மாற்றா சிக்னல் ஆப் ?

பிப்ரவரி 8யிற்குப் பிறகு பயனர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்தத் தனிப்பட்ட பயனரின் திறன் பேசியில் (Smart phone) வாட்ஸ்அப் அதன் சேவையைத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்னல் ஆப்பை பொருத்த வரை சிக்னல் ஆப் ஒருபோதும் பயனரின் தொலைப் பேசி எண்களைத் (Phone number) தவிரப் பிற தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதில்லை எனவும் மேலும் பயனரின் (User) தகவல் ஒரு போதும் எந்த ஒரு வணிகச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படாது எனவும் கூறப்பட்டு உள்ளது.

சிக்னல் ஆப் பயனரின் தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காமல் அவர்களை உரையாடவிடுவதோடு மட்டுமல்லாமல் , வீடியோ கால் , வாய்ஸ் கால், குழு உரையாடல் போன்ற பிற வாட்ஸ் ஆப்பின் சேவைகளையும் தருகின்றது. இந்த ஆப் தற்போது 400+ பயனர்களைக் கொண்டுள்ளதாகவும் விரைவில் இது அதிகமாகும் எனவும் கூறப்படுகிறது.

சிக்னல் ஆப் பாதுகாப்பானதா ?

சிக்னல் ஆப்பின் உரிமையாளர் யார் ?

சிக்னல் தொண்டு நிறுவனம் மற்றும் சிக்னல் மெசஞ்சர் எல்.எல்.சி நிறுவனம் சிக்னல் ஆப்பை உருவாகியுள்ளது. மேலும் இது தொண்டு நிறுவனம் என்பதால் இதன் சேவைகள் அனைத்தும் இலாப நோக்கமற்றதாக (Non-Profit) இருக்கின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த சிக்னல் ஆப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மோக்ஸி மார்லின்ஸ்பைக் மற்றும் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் இணைந்து சிக்னல் ஆப்பை உருவாக்கியுள்ளனர்.

 சிக்னல் ஆப்பில் வணிக கணக்கு (Businness Account) உண்டா ?

வணிகக் கணக்கு சேவைகள் இந்த சிக்னல் ஆப்பில் இல்லை. சிறு , நடுத்தர நிறுவனங்கள் விரும்பினால் ஒரு தனிக் கணக்கு ஆரம்பித்து கொள்ளலாம். மேலும் இந்த ஆப்பில் எந்த ஒரு பயனர் தகவல்களும் சேகரிக்கப்படுவதில்லை.

இந்த ஆப் பல காலமாகவே பயன்படுத்தப்படுகிறது இருப்பினும் வாட்சப்பின் இந்த ஒரு தனியுரிமைக் கொள்கை மாற்றமே இந்த ஆப்பை  பெரிதளவில் பிரபலமாக்கி உள்ளது. மேலும் இது திறந்த மூல செயலியாகவும் (Open Source App) உள்ளது. 

சிக்னல் ஆப்பை பயன்படுத்தலாமா ???

சிக்னல் ஆப்பை தாராளமாக பயன்படுத்தலாம். வாட்ஸ் அப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த சிக்னல் ஆப்பில் உள்ளது. எனினும் இது வாட்ஸ் ஆப்பை விட சிறந்தது என கொள்ள முடியாவிட்டாலும் இது நமது தனிப்பட்ட தகவல்களுக்கு ஒரு பாதுகாப்பை கண்டிப்பாக தருகிறது என கூறலாம்.

சிக்னல் ஆப் அம்சங்கள் 

  • End to end Encryption  பாதுகாப்பு 
  • வாய்ஸ் & வீடியோ கால் பாதுகாப்பு
  • குழு உரையாடல் பாதுகாப்பு 
  • தகவல் பாதுகாப்பு
  • ஆடியோ மற்றும் வீடியோ பகிருதல்
  • Self Destructing message (குறிப்பிட்ட நொடிக்குள் அழியும் விடுப்புகள் )
  • திரைப் பாதுகாப்பு (screen security)
சிக்னல் ஆப் பாதுகாப்பானதா ?



மேலும் படிக்க :


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்